12 ம் தேதி டி.டி.வி.தினகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி… கொத்தாகத் தூக்கத் துடிக்கும் எடப்பாடி..!

தேர்தல் முடிவுகள் டி.டி.வி.தினகரன் தரப்பை இப்படி மொத்தமாக கவிழ்க்கும் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தேர்தலுக்கு முன் அதிமுகவை நடுங்க வைத்த டி.டி.வியை இப்போது எடப்பாடி தரப்பு அலற வைத்து வருகிறது.

கிப்ட் பாக்ஸ் எம்டி பாக்ஸாகி விட்டதால் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இனியும் டி.டி.வி.யுடன் இருந்தால் நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்பதால் ஆதித்தன், அண்ணாமலை, மைக்கேல் ராயப்பன் போன்றோர் அதிமுகவில் இணைந்து விட்டனர்.

அடுத்து தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலும் அமமுகவிலிருந்து விலகத் தயாராகி வருகிறார்கள். அமமுகவின் பலம் என கருதப்பட்ட தென் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கு வலைவிரித்து இருக்கிறது அதிமுக தலைமை. இதற்கான திட்டத்தை அதிமுகவின் மூத்த தலைவரான தளவாய் சுந்தரத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன் படி அமமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேடி வருகிறார் தளவாய் சுந்தரம். அவர்களை மொத்தமாக ஒன்றிணைத்து வரும் 12-ம் அதிமுகவில் இணைக்க உள்ளார்களாம். கட்சியை விட்டு விலகிச் செல்லும் நிர்வாகிகளை எந்த உறுதி கொடுத்து தடுத்து நிறுத்துவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் டி.டி.வி.தினகரன்.

%d bloggers like this: