Daily Archives: ஜூன் 7th, 2019

கர்ப்பிணிகள் கவனத்துக்கு…

ரு பெண்ணின் வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையிலும் 10 மாதங்களுக்கு அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல்… ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு.

முதல் மாதம்: கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.

Continue reading →

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?!

எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980- 2000-களில் பிறந்தவர்களுக்கு இருக்கும் புதுவகை பிரச்னை இது. Continue reading →

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே! பெண்களுக்கு மார்புகளும் அந்தரங்க உறுப்புகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மனித உயிரை இந்த உலகுக்கு உயிர்ப்பித்துத் தருவதே ஆகும். பெண்ணின் அந்தக் குறிப்பிட்ட உறுப்புகளின் மீது ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான மனநிலைக்கும் இயற்கையின் காதல் விதிகளே காரணம்.

Continue reading →

மருந்தாகும் உணவு – சுக்கு பர்பி

ஞ்சி பல மருத்துவப் பயன்களைக் கொடுப்பதைப்போலவே, காய்ந்து சுக்கான பிறகும் பல்வேறு பலன்களைக் கொடுக்கும். சுக்கு, பெரும்பாலும் பொடியாகவும் எண்ணெய் வடிவத்திலும்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜிஞ்ஜிபெராசி (Zingiberaceae) என்ற மருத்துவ வகையைச் சேர்ந்த சுக்கு, ஏலக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்தது. நம் ஊரில் சுக்கு டீ, சுக்கு பால், சுக்கு காபி என்று பானங்களாகவோ, பேக்கரி சார்ந்த ரெசிபிகளாகவோ தயாரிக்கத்தான் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. சுக்கு பர்பி தயாரிக்கும் முறையை இங்கே பார்க்கலாம்!

Continue reading →

இரண்டு அமைச்சர்களுக்கு குறி!- உச்சக்கட்ட கோபத்தில் அமித் ஷா

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி ஐந்து தொகுதிகளில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மீது அமித் ஷா உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம். அவர்களுடைய கவுன்டவுன் தொடங்கி இரண்டு வாரமாகிவிட்டதாகக் கூறுகிறது பி.ஜே.பி வட்டாரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி மாநில நிர்வாகிகள், “நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து தொகுதிகளில் பி.ஜே.பி போட்டியிட்டது. நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட  ராமநாதபுரத்திலும், சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட கோயம்புத்தூரில் மட்டும்தான் பி.ஜே.பி இரண்டு லட்சம் வாக்குகள் குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மற்ற மூன்று தொகுதிகளிலும் தோல்வி வித்தியாசம் மூன்று லட்சம் வாக்குகளைத் தொட்டுவிட்டது.

Continue reading →

பன்னீர்செல்வத்தைவிட எடப்பாடி பழனிசாமி மேல்!’ – ஆடிட்டர் அஸ்திரத்தால் அதிரும் அ.தி.மு.க

இப்படியொரு வீழ்ச்சிக்குப் பிறகு அ.தி.மு.க-வோடு நெருக்கம் காட்டுவது அவசியமற்றது. இதனால் பா.ஜ.க தான் பலவீனப்பட்டுப் போகும். இனி அ.தி.மு.க-வை நம்பி காலத்தை ஓட்ட முடியாது. தேர்தல் முடிவில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை நம்பக்கம் கொண்டு வர வேண்டும் என்றால், அவர்களை வீழ்த்துவதுதான் ஒரே வழி.

Continue reading →

மிரட்டும் தண்ணீர்ப் பஞ்சம்… காலியாகும் அப்பார்ட்மென்ட்கள்!’ – சிக்கலில் சென்னை OMR சாலை

தண்ணீர் இல்லை என்கிற முழக்கங்களும், அதற்கான போராட்டங்களும் இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதைக் காரணமாக வைத்து காசு பார்க்கிற சம்பவங்களும் நிகழாமல் இல்லை. சாலையில் தென்படுகிற லாரிகளில் பாதிக்கு மேல் தண்ணீர் டேங்கர் லாரிகளாகவே இருக்கின்றன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு லாரி மீண்டும் மெட்ரோ நிலையங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களுக்கு ஆட்டோக்களில் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. நிமிடத்திற்கு நான்கு லாரிகள் மெட்ரோ நிலையங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு கிளம்புகின்றன. லாரிகள் என்று இருந்த வணிகம் தண்ணீர் ஆட்டோக்கள், தண்ணீர் வேன்கள் என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

Continue reading →