Advertisements

Daily Archives: ஜூன் 8th, 2019

பல்வலியா… தலைவலியா? – பாயும் பன்னீர்…. பதறும் எடப்பாடி!

அவர் வந்துவிடவே கூடாது என்று பலரும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைத்தான் கொண்டுவருவேன் என்று எடப்பாடி பழனிசாமி ஒற்றைக்காலில் நிற்கிறார்’’ என்கிற ‘இன்ட்ரோ’வுடன் உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘புதிய டி.ஜி.பி நியமனம் பற்றித்தானே…’’ என்று கேட்டதும், ‘‘சபாஷ்… சரியான யூகம்’’ என்றபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அடுத்து டி.ஜி.பி-யாக ஜாபர் சேட் வரவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் ஆசை. ஆனால், ஜாபர் சேட் பற்றிய பழைய விஷயங்கள் பலவற்றையும் நெருக்கமானவர்கள் மூலமாக எடப்பாடிக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.’’
‘‘சிலர் என்றால் போலீஸ் அதிகாரிகளா… அரசியல்வாதிகளா?’’

Continue reading →

Advertisements

பெண்ணின் பெருங்கனவு

பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும். ஓர் ஆண் ‘உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்’ என்று சொல்லும்போதும் பெண் மனம் இவனை நம்பலாமா, எந்தளவுக்கு நம்பலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும்.

இவ்வளவு கேள்விகளுக்கும் ஒருவன் சரியான விடையளித்து பாஸாகி விட்டாலும், அவனோடு இணைந்து வாழத் துவங்கும்போதும் பெண் தனது காமத்தீயின் வெப்பத்தை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. Continue reading →

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…

எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஆண்களில் படிப்படியாக நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்கள்,

Continue reading →

செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்!

ருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது சந்திரன் மற்றும் சுக்கிரன் அமைந்துள்ள இடத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷம் எனக் குறிப்பிடப்படுகிறது.

‘செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்குத் திருமணம் எளிதில் ஆகாது. செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு அதே தோஷம் உள்ளவரையே திருமணம் செய்துவைக்க வேண்டும்; இல்லையெனில் வீண் அபவாதங்கள் நிகழ வாய்ப்பு உண்டு’ என்பார்கள். ஆனால், செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க… செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து,  விதி விலக்குகள் தரப்பட்டுள்ளன. அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம்.

Continue reading →