அதிமுக தலைமைக்கு ரஜினிகாந்த்? ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி!

அதிமுகவுக்கு தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் ஈர்ப்பு மிக்க தலைவர்களாக இருந்தனர்.

எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு சென்றாலே போதும், அவர்களின் முகத்தை பார்த்ததும் ஓட்டு போடும் மனநிலையில் தான் அதிமுக தொண்டர்களும், பெரும்பான்மையான தமிழக மக்களும் இருந்தனர்.

முக வசீகரம்

அமெரிக்காவில், சிகிச்சை பெற்றபோதுகூட படுத்துக்கொண்டே, தேர்தலில், ஜெயித்தார் எம்ஜிஆர் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு, அவரது பெயருக்கு காந்த சக்தி இருந்தது. முக வசீகரம் இருந்தது. இதேபோலத்தான் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின்போது, செய்வீர்களா.. என்று கேள்வி கேட்டால், அதை செய்து முடித்தனர் தொண்டர்கள். கொள்கை, கோட்பாடு என்பவையெல்லாம் அப்புறம். முதலில் இந்த முகராசி, அதிமுகவுக்கு நன்கு ஒர்க் அவுட் ஆனது.

வலிமையான தலைமை

கட்சிக்குள்ளும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே மிகவும் வலிமை மிக்க தலைவர்களாக இருந்தனர். அவர்கள் சொல்லும் பேச்சை கட்சிக்குள் இருப்பவர்கள் கண்டிப்பாக கேட்டேயாக வேண்டும்.. அல்லது உடனடியாக நடவடிக்கை பாயும் என்ற நிலை இருந்தது. நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், என்னதான் கலகம் செய்தாலும், கட்சியை எதுவும் செய்துவிட முடியாது. ஏனெனில் இவ்விருவருக்கும், அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. எனவே, இரு தலைவர்களையும் பகைத்துக்கொள்ள அதிமுகவில் எவருக்கும் துணிவில்லை.

ராஜன் செல்லப்பா பேட்டி

இப்போதோ, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரட்டை தலைமையின் கீழ் இயங்க ஆரம்பித்துள்ளது. அதிமுகவுக்கு இது போன்ற இரட்டைத் தலைமை இதுவரை பழக்கமே கிடையாது. எனவே ஆதர்ஷ சக்தி கொண்ட ஒரு தலைவர் தலைமையில் ஒற்றை தலைமையில்தான், அதிமுக இயங்க வேண்டும் என்று, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் தெரிவித்தார். அவர் கூறியதில் ஒரு வார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. என்னவென்றால்.. எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஏற்கனவே ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான். அவர்களில் ஒருவர் தலைவராக இருக்கலாம். அல்லது இவர்கள் அல்லாமல் வேறு ஒருவரும் தலைவராக இருக்கலாம் என்ற கோரிக்கையை முன் வைத்தார் ராஜன் செல்லப்பா.

ராஜன் செல்லப்பா பேட்டி

இப்போதோ, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரட்டை தலைமையின் கீழ் இயங்க ஆரம்பித்துள்ளது. அதிமுகவுக்கு இது போன்ற இரட்டைத் தலைமை இதுவரை பழக்கமே கிடையாது. எனவே ஆதர்ஷ சக்தி கொண்ட ஒரு தலைவர் தலைமையில் ஒற்றை தலைமையில்தான், அதிமுக இயங்க வேண்டும் என்று, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் தெரிவித்தார். அவர் கூறியதில் ஒரு வார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது. என்னவென்றால்.. எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஏற்கனவே ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான். அவர்களில் ஒருவர் தலைவராக இருக்கலாம். அல்லது இவர்கள் அல்லாமல் வேறு ஒருவரும் தலைவராக இருக்கலாம் என்ற கோரிக்கையை முன் வைத்தார் ராஜன் செல்லப்பா.

போயஸ் கார்டன்

ராஜன் செல்லப்பாவின் இந்த வார்த்தை மிக முக்கியமானது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், குறிப்பிட்டுச் சொல்லும் படியாக மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் அதிமுகவில் இல்லை என்றே சொல்லிவிடலாம். அப்படியானால் மக்களை ஈர்க்கக் கூடிய அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கான விடை, போயஸ் கார்டன் நோக்கிதான் செல்கிறது. ஆம், அங்குதான் ரஜினிகாந்த் வசிக்கிறார்.

சட்டசபை தேர்தல்

நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். அதிமுகவும் கூட அடுத்த சட்டசபை தேர்தலுக்காக வலுவான தலைமையை, எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. அந்த கட்சிக்குள், நடைபெறும் சலசலப்புகள் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத வாக்கு வங்கி சரிவை, அதிமுக சந்தித்துள்ளது. எனவே, ஒன்றரை ஆண்டுகளில் வர உள்ள, சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த ஆதர்ஷ தலைமை ஒன்றை எதிர்பார்க்கின்றனர், அதிமுக தொண்டர்கள்.

அதிமுகவை காப்பாற்ற

எனவே, ரஜினிகாந்த் போன்ற மக்களிடம் பரிச்சயமான ஒருவர், அதிமுக தலைமைக்கு வரவேண்டும் என்று மேடை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான், இந்த சலசலப்புக்கள் எழுந்துள்ளதாக, தெரிகிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே திரைத் துறையில் இருந்து வந்தவர்கள். ரஜினியும் அதே துறையில் கோலோச்சுபவர். எனவே, அதிமுக தொண்டர்கள் மனநிலைக்கு, ரஜினிகாந்த் தலைவராக இருப்பது தான் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். ஏனெனில் அதிமுகவை பொறுத்தவரை தனிநபர், ஆதர்சனமும், முக வசீகரமும்தான் எப்போதுமே முக்கியமாக இருந்துள்ளது. இதை தவிர கொள்கையோ, கோட்பாடோ, திட்டங்களோ கிடையாது.

ஏற்பாரா ரஜினி?

அதிமுகவை காப்பாற்றுவதற்கு ரஜினிகாந்தான் வந்தாக வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சி மட்டத்தில் வலுப்பெறுவதாகக் கூறப்படுகிறது. புதிதாக ஒரு கட்சியை தொடங்கி, நிர்வாகிகளை நியமித்து, கட்சியை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பணி. எனவே ரஜினிகாந்தும் இந்த ஆஃபரை ஏற்றுக் கொள்வார் என்றே தெரிகிறது. இதற்கு கண்டிப்பாக டெல்லியிலிருந்து அழுத்தம் தரப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. இது கண்டிப்பாக தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

%d bloggers like this: