ஓ.பி.எஸ் பதவிக்கு கல்தா… துணை முதல்வராகிறார் வன்னியர் சமூக அமைச்சர்..?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பதவியை டம்மியாக்கி விட்டு வீட்டுக்கு அனுப்ப வியூகம் அமைத்து வருகிறது எடப்பாடி அணி. இந்த நிலையில் அவரது துணை

முதலமைச்சர் பதவியை பறித்து வன்னிய சமூக அமைச்சர் ஒருவருக்கு கொடுத்து அதிமுகவை வலுப்படுத்தலாம் என யோசனை தெரிவித்து குடைச்சலை ஆரம்பித்து இருக்கிறார் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம்.

ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற மகன் ரவீந்திரநாத்துக்கு எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என ஒற்றைக்காலில் தவிமிருந்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிலையில் ஓ.பிஎஸை அரசியலில் இருந்தே ஓரம் கட்டி அதிர்ச்சி கொடுக்க தயாராகி விட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதற்கு ஏற்றாற்போல ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி அணிக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற்றதை ஜீரணிக்க முடியாமல் அவரை ஓரம் கட்ட பலரும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதிமுகவில் மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அருமையான யோசனை ஒன்றை சொல்லி இருக்கிறாராம்.

அதாவது ‘ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சராகட்டும். அதற்கு பதிலாக துணை முதல்வர் பதவியை அவர் விட்டுக்கொடுக்கட்டும். அந்தப் பதவியை வன்னியரில் யாருக்காவது தந்து கட்சியை வலுப்படுத்தலாம்’ என எடப்பாடி தரப்பை நச்சரித்து வருகிறாராம். இதன் மூலம் மாநில அரசியலில் ஓ.பி.எஸை ஓரம் கட்டலாம் எனவும் தூண்டி விட்டிருக்கிறார். ஒருவேளை இந்த யோசனை ஏற்கப்பட்டால் வன்னியர்களில் சீனியர் அமைச்சரான தனக்கே துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்கிற அமைச்சர் சண்முகம் அந்தப்பதவி தனக்கு கிடைக்கும்.

இதன் மூலம் வன்னியர் சமுதாயத்தில் இதுவரை யாருமே முதல்வராகவோ, துணை முதல்வராகவோ பதவி வகிக்கவில்லை. அதை முதன் முறையாக எடப்பாடி மூலம் கிடைக்கப்பெற்றது என்கிற உற்சாகத்தில் வன்னியர் சமுதாயம் அதிமுகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும். இப்போது பாமகவை சுத்தமாக கைவிட்டு விட்ட வன்னிய இன மக்கள் அதிமுகவை ஆதரிப்பார்கள் என உசுப்பேற்றி வருகிறார் சி.வி.சண்முகம். என்ன நடக்கிறதோ… இந்த பரமபத விளையாட்டில் யார் வெற்றிபெறப்போகிறார்களோ..?

%d bloggers like this: