பாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்!

தமிழகத்தில் தாமரையை நேராக மலர வைக்க முடியாமல், தோற்று போய்.. குறுக்கு வழியிலாவது எப்படியாவது மலர வைக்க கணக்கு போடுகிறது பாஜக தலைமை.. அதில் ஒரு புள்ளிதான் ஜாபர்சேட்!

ஜாபர்சேட்! தமிழக மக்கள் அறிந்த பெயர்தான்.. திமுக ஆட்சிக் காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர். அவர் என்ன நினைப்பாரோ அதை சாதித்துவிடுவார். சுருக்கமாக சொல்ல போனால், ஸ்டாலின், அழகிரி, கனிமொழியையும் தாண்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்பட்டவர்.

இதுவரை தமிழக காவல்துறை வரலாற்றிலேயே அதிகாரம் மிக்கவர் யாருமே இருந்தது கிடையாது என்ற பெயரையும் பெற்றவர்.

வழக்கு

ஆனால் விதி.. இவருக்கும் பஞ்சாயத்து, வழக்கு, கோர்ட், கேஸ் வந்தது. ஆனால் எப்படியோ தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை, கோர்ட் மூலம் ரத்து பண்ணிவிட்டார். அதனால் இப்போது ஃப்ரீயாக உள்ளார்,

பாஜக முனைப்பு

இப்போது விஷயம் என்னவென்றால், இந்த ஜாபர் மீது பாஜக தலைமையின் பார்வை விழுந்துள்ளது. அதாவது ஜாபரை வைத்து காரியத்தை செயல்படுத்த பாஜக முனைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அமித்ஷா

டிஜிபி ராஜேந்திரன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், அந்த பதவிக்கு ஜாபர் சேட் அடி போட்டுள்ளார். இதற்கு பிரதிபலனாக, திமுக ஆட்சி காலத்தில் என்னென்ன நடந்ததோ எல்லா விஷயமும் என் பாக்கெட்டுக்குள் என்ற ஒரு விஷயத்தை போட்டாராம். இதைதான் அமித்ஷாவும் லபக்-என்று பிடித்து கொண்டுள்ளார்.

திமுக

ஒருவேளை ஜாபரை டிஜிபி ஆக்கிவிட்டால், நமக்கு சாதகமாக செயல்படுவார் என்றும், திமுக சம்பந்தப்பட்ட பல விஷயங்களை ஜாபர் மூலம் கறந்து, தமிழகத்தில் கால் ஊன்றலாம் என்றெல்லாம் கணக்கு போடுகிறதாம். இதைதவிர ஓய்வு பெற உள்ள ராஜேந்திரனும், எப்படியும் ஜாபருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யவே முன்வருவார் என்பதால் இந்த பிளான் எல்லாம் சாத்தியம் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தாமரை மலருமா?

எப்படியோ.. நேரடியாக கால் ஊன்ற முடியாமல்.. அதே சமயம் திமுகவையும் திணறடிக்க… ஜாபர் என்ற புள்ளியை வைத்து மொத்த கோலத்தையும் போட்டு முடிக்க பாஜக தயாராகி வருகிறதாம்!

%d bloggers like this: