சத்தியமா நம்புங்க! இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.

கோமுகாசனம் செய்முறைகள்.

தரையில் விரிப்பில் அமர்ந்து வலது முழங்காலை மடித்து குதிங்கால் இடது பின்புறம் அருகே வரும்படியாக கொண்டு வரவேண்டும். அதேபோல் இடது காலை வலது முழங்கால் மேல்தூக்கி

வைத்து மடித்து தன் பின்புறம் படும்படியாக ஒட்டி வைக்க வேண்டும்.

பின்னர், வலது கையை வலது தோள்புறமாக மேலிருந்து கீழ்நோக்கியும், இடது கையை பின்புறமாக கொண்டு வந்து வலது கையினை பிடித்து கொள்ள வேண்டும். உடலினை நேராக வைத்திருக்க வேண்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும், இதுவே கோமுகாசனம் ஆகும்.

கோமகுசனம் நன்மைகள் :
கோ -பசு
முகா -முகம்
இந்த ஆசனத்தின் இறுதி நிலையில் கால்கள் இரண்டும் சேர்ந்து பசுவின் முகத்தைப் போன்றுக் காட்சி
தருவதால்இப்பெயர் பெற்றது.

பலன்கள்:

1.தோல் மூட்டில் கால்சியம் சேர்வதைத் தடுக்கிறது.
2.தோல் தசைகள் மற்றும் மரபுக் கூட்டுத் தசைகளை வழிவடையச் செய்கிறது
3.சப்பை பாதத்தை நீக்குவதோடு,அயர்வடைந்த கணுக்கால் மூடுத்தசைகள்,நுனிக்கால் தசைகளிப்
புத்துணர்வு பெறச்செய்கிறது.
4.முதுகு வலி மற்றும் தசைகளின் வழிகளை நீக்கும் ஆசனமாகும். மனம் மற்றும் உடலுக்கு
அமைதியை கொடுக்கும் குறுகிய மார்பு விரிவாகும்
5.கால்களுக்கு வலிமையை கொடுக்கும் மூட்டுவலி வராமல் காக்கும் முதுகு நுனி பாகங்களை
வலுப்படுத்தும்.

வஐ்ராசனம் :

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள், இந்திரன் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் வஜ்ராயுதம், பல ஆண்டுகள் நன்கு வளர்ந்து விளைந்து பருத்து பெருத்த மரத்தை வெட்டினால் அதன் நடுவில் கருமையான ரேகைகள் உடன் கூடிய தண்டு பாகம் தெரியும் இதை வஜ்ரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.

அப்பகுதியை சாதாரணமாக கோடாரியால் வெட்டுவதும், உளியினால் செதுக்குவதும் மிகவும் கடினம், அவ்வளவு அடர்த்தியாக இரும்பை போன்று அப்பகுதி இருக்கும், நம் உடலை வஜ்ரம் போல் வைத்திருக்க இந்த வஜ்ராசனம் உதவுகிறது. இந்த ஒரே ஓர் ஆசனம்தான் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடியது. ரத்த ஓட்டம் கால்களுக்குச் செல்லாமல், வயிறு முழுவதும் சீராகச் செல்வதால், செரிமான செயல்பாடு சீராக நடக்கிறது.

இந்த நிலையில் அமர்வதால், இடுப்புப் பகுதி உறுப்புகள் ஆரோக்கியமாகும். பைல்ஸ்,
இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். குழந்தையின்மை
பிரச்னை வராமல் காக்கப்படும். செரிமான சக்தி மேம்படும்.

மேலும் தொடை தொங்கு சதைகள் குறையும். முதுகுத் தண்டிற்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அடி
வயிற்று உறுப்புகள் அவைகளுக்குரிய இடத்தில் சரியமைந்திருக்கும். முதுகுத்தண்டையொட்டியுள்ள தசைகள் உறுதியாகி பலம் பெறும். வயிற்றிற்குக் கீழ் உள்ள பகுதி பலப்படும்.

இறுகியிருக்கும் தசை நாறுகள், பாத எலும்புகள், கணுக் கால்கள், கெண்டைக் கால் தசைகள்,
தொடை தசைகள், இடுப்பு ஆகியன தளர்ந்திடும்.

செய்முறை
சாதாரணமாக நாம் அமரும் சுகாசனத்தில் அமரவும். நிமிர்ந்து நேராக உட்காரவும் இரண்டு கால்களையும் நேராக நீட்டவும். இரண்டு கால்களையும் ஒவ்வொன்றாக மடக்கி, கால் முட்டி தரையில்பட அமரவும் இரண்டு பாதங்களும் மேல் நோக்கிய நிலையில், அவைகளுக்கிடையே புட்டங்கள் தரையில்பட அமரவேண்டும்.

கால்களின் இரண்டு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் இருக்க வேண்டும்
கால் முட்டிகள் இரண்டும் எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அருகருகே இருத்தல்
வேண்டும் உள்ளங்கையை தொடையில் வைத்திருக்க வேண்டும் பார்வை நேராக இருத்தல் வேண்டும்

இந்த ஆசணத்தை செய்து முடிக்கும் வரை மேலுடல் நேராக இருத்தல் வேண்டும்

%d bloggers like this: