உங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்

உங்களின் கறுப்பு நிற ஆடைகள் நிறம் மங்கிவிட்டதால், அவைகளுக்கு மாற்றாக புதிய ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, உங்களின் விருப்பமான கறுப்பு நிற டி-ஷர்ட் மற்றும் நீங்கள் அதிகம் விரும்பும் கறுப்பு ஆடைகளின் பழைய நிறத்தை மீண்டும் கொண்டு வர கீழ்க்காணும் யுக்தியை பயன்படுத்துங்கள்.

கறுப்பு நிற ஆடைகளை மீண்டும் மீண்டும் துவைத்து, உலர வைப்பதன் மூலம் முடிவில் அவற்றின் நிறம் மங்கிவிடுகிறது. நிறத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

1) ஆடைகளின் நிறமானது ஒருங்கிணைக்கப்பட்டதாகும். நீங்கள் பலமுறை அவற்றை துவைக்கும்போது, ஒத்த நிறம் கொண்ட ஆடைகளை மட்டும் ஒன்றாக சேர்த்து ஒரே நேரத்தில் துவைப்பதை வழக்கமாக கொண்டிருங்கள். துணிகளை அலச, குளிர்ந்த நீரையே பயன்படுத்துங்கள்.

2) ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராங்க் பிளாக் காபியை காய்ச்சுங்கள்.நன்றாக காய்ச்சினால், இறுதியில் அடர் கறுப்பு நிற காபி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சலவை செய்வதற்கு 2 கப் காபி தேவை என்பதால், காபி மேக்கரின் முழு அளவினையும் பயன்படுத்துங்கள்.

3) வாஷிங்மெஷினில் துணிகளை அலசத் தொடங்கும் போது, தயாரிக்கப்பட்ட சூடான காபியை அதில் சேர்த்து விடவும். மெஷினின் மூடியை மூடி, அலசும் நடைமுறை முடியும் வரை காத்திருக்கவும்.

4) தண்ணீரை வெளியேற்றி உலர்த்துங்கள். துணிகளை வெளியில் எடுத்து, அவற்றை உலர்த்த கொடிக்கயிற்றில் தொங்க விடுங்கள்.

இது எளிமையானது மற்றும் பயனுள்ளது.

முக்கிய குறிப்பு: இயந்திரத்தில்உலர்த்துவதனால், அடர் நிறதுணிகளின் சாயம் மாறி, நிறம்மங்கிவிடும். எனவே, துணிகளின்நிறத்தை பாதுகாக்க, அடர் நிறதுணிகளை மட்டும் எப்போதும்கைகளால் பிழிந்து, பின்னர்உலர்வதற்காக தொங்கவிடுங்கள்.

%d bloggers like this: