எடப்பாடிக்கு அதிகரிக்கும் சிக்கல்! – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்

ரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் கருத்துக் கேட்க, கட்சித் தலைமைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி. இதில், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்கச் சென்று, திரும்பிவந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி , சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச்

சென்றிருக்கிறார். இந்நிலையில், மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று டெல்லி பயணிக்கிறார். டெல்லிக்குச் செல்வதிலும் சென்று வந்ததிலும் அ.தி.மு.க தலைமைக்குள் மீண்டும் புகைச்சல் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மாநில சட்டமன்றத் தேர்தல்களும் மக்களவைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே எடுத்திருந்தார்.

அதே சமயம், பன்னீர்செல்வம் நினைத்திருந்தால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம். கட்சித் தலைமை பங்கேற்காததால், சி.வி.சண்முகம் டெல்லி செல்ல நேர்ந்தது. அவர் சென்றும், கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால், கட்சித் தலைமைமீது சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் உள்ளார். தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடிக்கு தினம் தினம் சிக்கல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைப் புறக்கணித்தற்கு அ.தி.மு.க தலைமைகள் ஆளுக்கொரு காரணத்தைத் தயார்செய்து வைத்துள்ளனர். டெல்லியின் வலைப்பின்னலில் இருந்து அ.தி.மு.க தப்பிக்குமா என்பது வருங்காலங்களில் தெரியும்.

%d bloggers like this: