குழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்

குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமான உணவை விரும்புவதில்லை அதற்கு பதிலாக ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர் அதனால் ஏற்படும் விளைவுகள் இதோ,

நிறைய சுவைகளில், நிறைய பிராண்ட்களில் சிவிங் கம் வருகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை வாங்கித் தர கூடாது.

அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்த்துவிடுங்கள்.

குழந்தை பிஸ்கெட் கேட்டு அடம் பிடித்தால், ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தாருங்கள்.

குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள்.

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

பல வண்ணங்களில் ஃபுட் கலர் சேர்க்கப்பட்டுள்ள ஸ்வீட்களைத் தவிர்ப்பதே நல்லது.

குழந்தைகள் நாக்கின் சுவை எந்த உணவில் கிடைக்கிறதோ அதனை தான் விரும்புகின்றனர். அதிலும் குழந்தைகள் தின்பண்டங்களை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதனால் பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது. எனவே அனைத்தையும் வீட்டில் செய்து கொடுக்கவும்.

மேலும் குழந்தைகள் நல மருத்துவர்களின் ஐரோப்பிய கூட்டத்தின் போது 52 ஆவது மாநாட்டில் இதைப் பற்றிய தகவலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதனால் குழந்தைகள் மட்டுமில்லாது அனைவரும் இந்த மாதிரியான உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

%d bloggers like this: