பியூட்டி: ஃபேஷியல் தேவைதானா?

பேஷியல் தேவையா, இல்லையா’ என்பது பட்டிமன்ற விவாதத்துக்குட்படுத்தப் பட வேண்டிய தலைப்பாகவே தொடர்கிறது.

வசதியும் நேரமும் இருப்பவர்கள் அதை அவசியம் என்று சொல்வதையும், இந்த இரண்டும் இல்லாதவர்கள் அது தேவையே இல்லை என்று சொல்வதையும் காலங்காலமாகக் கேட்டுக்கொண்டிருக் கிறோம். உண்மையில் சருமத்துக்கு ஃபேஷியல் என்ன செய்யும்? அதற்கு நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம்? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

 

“நம் உடல் உறுப்புகளுக்கு எப்படி வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, தாதுச்சத்து என எல்லாம் தேவையோ, அப்படித்தான் சருமத்துக்கும் ஊட்டம் தேவை. உடல் உறுப்புகளுக்கு உடற்பயிற்சி மாதிரி, முகத்தசைகளுக்கு ஃபேஷியல் என்றும் சொல்லலாம்.

பொதுவாக 25 வயதுக்குப் பிறகு ஃபேஷியல் செய்யத் தொடங்கலாம். அதற்குப் பிறகுதான் சருமம் தொய்வடையத் தொடங்கும். சருமத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும். அதற்கு முன் ஃபேஷியல் தேவையில்லை. முகத்துக்கு ஏதேனும் அழகு சிகிச்சை செய்தாக வேண்டும் என நினைப்பவர்கள், கிளென்ஸ் செய்து, பேக் போட்டுக்கொண்டாலே பளிச் சென்று மாறுவார்கள்.

ஃபேஷியல் செய்யும்போது ஒருவரின் வயது, சருமத்தின் தன்மை போன்றவற்றை கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஸ்கின் டெஸ்ட் செய்து பார்த்து, அதன் பிறகு என்ன மாதிரியான ஃபேஷியல் தேவை என்று முடிவு செய்யலாம். எல்லா சீசனுக்கும் ஒரே ஃபேஷியல் பொருந்தாது. அதேபோல மணப்பெண்களுக்கு, முதுமையைத் தள்ளிப்போட, பருக்களை நீக்க, மங்கு போக…இப்படி பிரத்யேக ஃபேஷியல்களும் இருக்கின்றன. 

20 நாள்களுக்கொரு முறை ஃபேஷியல் செய்துகொள்ளலாம். ஃபேஷியலின் பலனைத் தக்கவைத்துக்கொள்ள தினமும் கிளென்சிங், டோனிங், மாயிஸ்சரைசிங் செய்ய வேண்டும். தவிர, இரவில் ஆன்டி ஏஜிங் க்ரீம் அல்லது சீரம் உபயோகிப்பதும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும்.  கடைகளில் கிடைக்கும் ஃபேஷியல் கிட்டுகளை உபயோகித்து நீங்களாகவே ஃபேஷியல் செய்துகொள்வதைத் தவிர்ப்பது மிகமிக அவசியமானது.”

%d bloggers like this: