Daily Archives: ஜூன் 26th, 2019

சேகர் ரெட்டி ரிலீஸ்! – இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்?

மீண்டும் பரபரப்பு வட்டத்துக்குள் வந்திருக்கிறார் சேகர் ரெட்டி!
வேலூர், காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசிதான் சேகர் ரெட்டியின் ஊர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்ட ராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச்சாலைகள், டெலிபோன் கேபிள் அமைப்பது எனச் சிறிய வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டு 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

Continue reading →

கழற்றி விடப்படும் காங்கிரஸ்!

முன்கூட்டியே வந்துவிட்ட கழுகார், ‘‘கேம்  ஓவர்… கேம் ஓவர்…’’ என்று சொல்லிக் கொண்டே வழக்கமான தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி மொபைல் போனை மாற்றி மாற்றி அழுத்திக்கொண்டிருந்தார்.

சட்டென்று உள்ளே நுழைந்த நாம், ‘‘இதென்ன குழந்தைத்தனமாக விளையாட் டெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று ஆரம்பித்தோம்.

‘‘அப்படியென்றால், காங்கிரஸும் தி.மு.க-வும் தற்போது மோதிக்கொள்ள ஆரம்பித்திருப்பதை ‘குழந்தைத்தனம்’ என்பீரோ?’’ என்று செய்திக்காக லீட் எடுத்த கழுகார், சிரித்தபடியே தொடர்ந்தார்.

Continue reading →

யானையின் வலிமை… குதிரையின் சக்தி…

53


அஸ்வகந்தா ஸ்பெஷல்

‘‘சிறிய மூர்த்தி… பெரிய கீர்த்தி என்பார்கள். அஸ்வகந்தாவுக்கு மிகவும் பொருத்தமான வர்ணனை என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வளரும் சிறிய குறுஞ்செடியாக அஸ்வகந்தா இருந்தாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிமுக்கிய மருந்தாக திகழ்கிறது. ஆரோக்கியத்தை கூட்டி உடல் பலத்தை அதிகரிக்கச் செய்கிறது.

Continue reading →

தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்!

தங்க தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தையில் முதலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தான் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே தினகரனை ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியிடப்பட்டதாம்.

Continue reading →

கொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்!

கொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்ஆனது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்குக் கொடுத்த பிரத்யேகப் பேட்டியில்,

Continue reading →

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா?!

இலக்கை அடைவதில் குறுக்குவழிகள் ஒருபோதும் உதவாது. இது வாழ்க்கையின் எந்த இலக்கை அடைவதற்கும் பொருந்தும். எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட நினைப்பவர்கள் இதைத் தாரக மந்திரமாகக் கொண்டே முயற்சியில் இறங்க வேண்டும்.

எடைக் குறைப்புக்காக என்னென்னவோ வழிகளையெல்லாம் பின்பற்றி, எதிலும் இலக்கை அடைய முடியாத எத்தனையோ பேரை என்னுடைய 20 வருட அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் அத்தனை பேருக்கும் எடையைக் குறைக்க வேண்டும் என்பதைவிடவும், அதை சீக்கிரமே சாதிக்க வேண்டும் என்கிற வெறியே அதிகமிருந்தது. அதற்காக அவர்கள் நாடிய அனைத்துமே குறுக்குவழிகள் என்பதில்தான் சிக்கல்.

Continue reading →

பிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்!

உலர்ந்த இலை இவ்வளவு மாயம் செய்யுமா?’ என்று நம்மையெல்லாம் ஆச்சர்யப்படவைக்கும் இலைப் பொக்கிஷம் ஒன்று நம்மிடம் இருக்கிறது. `பிரிஞ்சி இலை’ என்று அழைக்கப்படும் அந்தப் பொக்கிஷம், ஆகச் சிறந்த மணமூட்டி!

உணவுக்கு மணமூட்டுவதில் தொடங்கி, பல்வேறு நோய்களை விரட்டியடிக்கும் பிரிஞ்சி இலை, அஞ்சறைப் பெட்டியின் அதிவாசனைக் கருவி. விதைகள், பட்டைகள், கிழங்குகள், தண்டுகள் வரிசையில் ஒரு மரத்தின் இலை, பிரமிப்பூட்டும் அதன் வாசனையால் சமையலறை முழுவதும் அலங்கரிப்பது இயற்கையின் அற்புத ஆற்றலுக்கு ஒரு சாட்சி.

Continue reading →