கொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்!

கொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்ஆனது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்குக் கொடுத்த பிரத்யேகப் பேட்டியில்,

‘‘கொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீணானது. டிடிவி தினகரனுடன் நான் சுமுகமாகப் போக விரும்பவில்லை. என் மீது நடவடிக்கை எடுத்தாலும், இல்லையென்றாலும் நான் அமைதியாகத் தான் இருப்பேன்.
புதுக்கட்சி, புது சின்னத்தை மக்கள் விரும்பவில்லை, தேர்தல் முடிவில் அது தான் தெரிந்துள்ளது. அதிமுகவில் சேரப்போகிறேன் என்று டிடிவி தினகரன் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். தினகரனை நம்பிவந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தெருவுக்கு வந்துவிட்டனர். தற்போதுவரை எந்தக் கட்சியிலும் சேரவில்லை, மனநிறைவுடன் இருக்கிறேன். ஒரு சதவீத அதிமுக தொண்டர்கள் கூட அமமுகவில் இல்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது’’ என்று பேசினார்.

முன்னதாக, அமமுக மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் ஆகியோர் உட்பட அமமுகவினர், தங்கதமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், விரைவில் தேனிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தனது ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் தங்க தமிழ்செல்வனுக்கு தெரியாமல் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார்.
இந்த விவரம் தெரிந்த தங்க தமிழ் செல்வன், ‘டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சித்து பேசுவது போல் நேற்று ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

%d bloggers like this: