தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்!

தங்க தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தையில் முதலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தான் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே தினகரனை ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியிடப்பட்டதாம்.

அமமுகவில் தினகரனை தலைவராக ஏற்றுக் கொண்டுதான் நிர்வாகிகள் வலம் வருகின்றனர். ஆனால் தொடக்கம் முதலே தங்க தமிழ்செல்வன் தங்களோடு ஒருவராகத்தான் தினகரனை நடத்தி வந்தார்.

ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுநடக்காத நிலையில் தினகரனுடன் சேர்ந்து கொன்டு முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

தங்கம் கருத்து வேறுபாடு

தினகரன் அணிதான் என்றாலும் தங்க தமிழ்ச்செல்வன் தனிஆவர்த்தனம்தான். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரனுடன் கருத்து வேறுபாடு தொடங்கியது. தற்போது பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்துவிட்டனர்.போட்டுக் கொடுத்த பிரமுகர்

தினகரன், தங்கம் இடையேயான கருத்து வேறுபாட்டை ஊதி பெரிதாக்கியது ஒரு முக்கிய பிரமுகர்தானாம்.. தினகரனும் அந்த பிரமுகரும் பேசிக் கொண்டிருந்த போதுதான் தங்கம் தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தைகளால் விளாசியிருக்கிறார் தினகரன். இந்த வார்த்தைகளை அச்சுபிசகாமல் அப்படியே தங்கத்திடம் அந்த பிரமுகர் போட்டு கொடுத்திருக்கிறார்.
ரிலீஸ் செய்த தேனி பிரமுகர்

இதில்தான் படுசூடாகிப் போன தங்கம், போனை போட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார். இந்த அர்ச்சனைகளை தேனி பிரமுகர் ஒருவருக்கு போட்டும் காட்டியிருக்கிறார் தங்கம். அந்த தேனிபிரமுகர், தினகரனை டேமேஜ் செய்வதற்காகவே பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிவிட்டாராம்.
அடுத்த நம்பர் 2

தங்கம் விக்கெட் காலியானதில் தற்போது போட்டுக் கொடுத்த பிரமுகர் மிகவும் மகிழ்ச்சியாம். இனி அமமுகவில் தினகரனுக்கு அடுத்து நாம்தான்… என கெத்துகாட்டி வருகிறாராம்.

%d bloggers like this: