Advertisements

Daily Archives: ஜூன் 27th, 2019

மாற்று முதலீட்டுத் திட்டங்கள்… ஓர் எச்சரிக்கை!

ந்திய முதலீட்டுச் சந்தை என்பது கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பரிணாமங்களைச் சந்தித்து வருகிறது. சுமார் இருபது முப்பது ஆண்டுகளுக்குமுன்பு நிலவிவந்த முதலீட்டுச் சூழல் இன்றைக்கு இல்லை. பல்வேறு புதிய வடிவங்களில் இன்றைய முதலீட்டுச் சூழல் மாறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் முதலீடுகள் என்பது வங்கி மற்றும் நிறுவன வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் என்று ஒரு குறுகிய முதலீட்டுச் சூழலாகவே இருந்து வந்துள்ளது. விஷயம் தெரிந்த சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளனர்.

Continue reading →

Advertisements

சருமம்: மங்கு

பெண்களைப் பெரிதும் பாதிக்கும் அழகியல் பிரச்னைகளில் முக்கியமானது மங்கு. இந்த பாதிப்பு ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம். அதாவது 9:1 என்கிற விகிதத்திலேயே பாதிக்கிறது. இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்றாலும், சூரியனின் புறஊதாக் கதிர்களின் தாக்குதலால் ஏற்படுவதாகத் தெரிகிறது. புறஊதாக் கதிர்கள், மெலனின் என்கிற நிறமிகளின் உற்பத்தியைத் தூண்டுபவை.  மெலனின்தான் மங்கு ஏற்பட முக்கியக் காரணம்.

Continue reading →

உணவே மருந்து!

வாயுவை விரட்டும் பெருங்காயம்!

வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படும் நேரத்தில் கால் ஸ்பூன் பெருங்காயப் பொடியை மோரில் கலந்துகுடித்தால் ஏப்பத்துடன் வாயு வெளியேறி நிவாரணம் கிடைக்கும்.

Continue reading →

ஸ்டாலினைச் சந்திக்கும் தங்க தமிழ்ச்செல்வன்?! – பலனளிக்காத எடப்பாடியின் வாக்குறுதிகள்

தி.மு.க முகாமில் இருந்து தூண்டில் வீசப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமியோ, `கொஞ்சம் பொறுமையாக இருங்கள் தங்கம். மாவட்டப் பொறுப்பை வழங்க முடியாவிட்டாலும் மாநில அளவிலான பொறுப்பைக் கொடுக்கிறேன். உங்களுடைய பொருளாதார சிரமங்களை எல்லாம் பார்த்துக்கொள்கிறேன். வேறு எங்கும் போய்விட வேண்டாம்’ என வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தி.மு.க முகாமுக்கு இடம்பெயரும் முயற்சியில் இருக்கிறார் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். “அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் தொடர் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

Continue reading →

சரும நலன் காக்கும் பழங்கள்!

பழங்களை உண்ணும்போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைக்கும். அதே பழங்களை சமீப காலமாக இயற்கையான அழகுசாதன பொருளாகவும் உபயோகிக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, முகத்திற்கு ஃபேஷியல் செய்வதற்கு பழங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அழகு சிகிச்சை நிபுணர் கீதா அசோக்கிடம் Fruit facial பற்றி கேட்டோம்…

Continue reading →