கோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா

:கோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து திண்டுக்கல் கால்நடை துறை முன்னாள் இணை இயக்குனர்

ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.முட்டையை வேக வைக்காமல் சாப்பிட கூடாது. அவிடின் எனும் புரதம் சமைக்காத முட்டையின் வெள்ளை கருவில் உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய இந்த புரதம், முட்டையில் உள்ள பயோட்டின் எனும் சத்தோடு கலந்து விடும். முட்டையை வேக வைக்கும் போது அவிடின் புரதம் செயல் இழந்து விடும். இதனால் பயோட்டின் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.வெள்ளை கருவில் புரதசத்தினை குடலில் செரிக்க பயன்படுவதை தடுக்கும் பொருட்கள் உள்ளன. இதனால் புரதம் செரிமானம் ஏற்படுவதில் தடை உண்டாகும்.முட்டையை வேக வைப்பதால் இவையும் தம் செயலை இழக்கின்றன. எனவே முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே உடலுக்கு நன்மை. குழந்தைகளுக்கு தேவையான இரும்பு சத்து மஞ்சள் கருவில் உள்ளது.மஞ்சள் கருவை வேக வைக்காமல் கொடுத்தால் அதிலுள்ள புரதம் குடலில் ஈர்க்கப்பட்டு ரத்தத்தில் சேரும். இதனால் குழந்தைகளுக்கு அலர்ஜி உண்டாகும். இதை தவிர்க்க மஞ்சள் கருவை மட்டும் வேக வைத்து கொடுக்கலாம். ஓராண்டு முடியும் வரை வெள்ளை கருவை குழந்தைகளின் உணவில் சேர்க்க கூடாது, என்றார்.

%d bloggers like this: