டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

ரிலையன்ஸ் ஜியோ கிகாபைபர் தனது சேவையை துவங்கி கிட்டதட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. மற்ற நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக சேதம் செய்ய பொது வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திக்கின்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜிகா பைபரின் வணிக வெளியீட்டு தேதியும் இந்த மாதத்தில் நடக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ டிடிஹெச் சேவையில் அறிவிக்ககூடும் என்று சில வதந்திகள் இருக்கின்றன. இருப்பினும் தற்போது உறுதிபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட், தொலைக்காட்சி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் ஒரே கேபிளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.

ஜியோவின் டிடிஹெச் சேவை:

டிராயின் புதிய ஆணையை அமல்படுத்திய பிறகு, டிடிஹெச் மற்றும் சந்தாதாரர்களும் ஓடிடி இயங்குளதங்ளுக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கம்:
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் நுழைந்த பிறகு, பல்வேறு மாற்றங்களையும் கொண்டுள்ளது. இது தனி நிறுவனமாக ஒரு புட்சியை செய்துள்ளது.

மேலும், மலிவு விலையிலும் சேவைகளை தடால் அடியாக வழங்கின்றது. பல்வேறு யுக்திகளையும் கையாண்டு தற்போது முன்னணி நெட்வொர்க்காக ஜியோ நிறுவனம் இருக்கின்றது. மேலும் 5ஜியில் சேவையை வழங்க தயாராகிவிட்டது.

டிடிஹெச் துறையில் ஏர்டெலுடன் போட்டி:
தற்போது டிடிஹெச் துறையில் மிகவும் அசைக்க முடியாததாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிச் டிவி உள்ளன. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் டிடிஹெச் துறையிலும், ஜியோ ஜிகா டிவியுடன் பிராட்பேண்ட் இணைப்புடன் வருவதால் ஏர்டெல், டிடிஹெச் டிவியுன் கடும் போட்டி ஏற்படும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் கடும் போட்டியில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், பல்வேறு சேவைகளையம் ஜியோ நிறுவனம் வழங்கும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பெரும் எதிர்பார்ப்பில் ஜியோ கிகா:
ரிலையன்ஸ் ஜியோ கிகாஃபைபர் மற்றும் கிகாடிவி ஆகியவற்றின் வணிக ரீதியான அறிமுகத்திற்கு முன்பே இந்தத் துறையில் ரிலையன்ஸ் ஜியோவால் பல்வேறு பரபரப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது, ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சேவைகள் மெட்ரோ நகரங்களில் ஒரு சோதனை கட்டத்தில் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ சில மாதங்களில் மட்டுமே புதிய நகரங்களில் அவற்றை வெளியிடுவதற்கு நெருக்கமாக இருக்கக்கூடும் என்பதையும் நாங்கள் அறிவோம்.

பிராட்பேண்ட் உடன் 600 சேனல்கள்:
பிராட்பேண்ட், டிவி மற்றும் லேண்ட்லைன் உள்ளிட்ட சந்தாதாரர்களுக்காக தொகுக்கப்பட்ட டிரிபிள் ப்ளே திட்டத்தை டெலிகாம் ஆபரேட்டர் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

தொலைத் தொடர்பு ஆபரேட்டரின் இந்த திட்டம் மாதத்திற்கு ரூ. 600 வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாடகையில் சந்தாதாரர்கள் 600 சேனல்கள், 1 ஜி.பி.பி.எஸ் பிராட்பேண்ட் மற்றும் வரம்பற்ற லேண்ட்லைன் சேவைகளை அனுபவிக்க முடியும்.

%d bloggers like this: