Daily Archives: ஜூலை 4th, 2019

விவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்!

விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.  வழக்கின் முடிவில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தாய் அல்லது தந்தையிடம் குழந்தைகள் அனுப்பப்படுவார்கள். பெற்றோரின் விவாகரத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய சூழல்களில், அந்தக் குழந்தையின் உளவியல் மிகவும் பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவரிக்கிறார், உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

விவாகரத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Continue reading →

தி.மு.க பதுங்கும் மர்மம்!

‘இந்தப் புலி அட்ராக்ட் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசகாய புலி, அசால்ட்டான புலி, அசுரப் புலி, அற்புதப் புலி, வாடாத புலி, வதங்காத புலி…’ டி.ராஜேந்தரின் குரல் ஓங்கி ஒலிக்க, திரும்பிப் பார்த்தால் வழக்கமான தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டு மொபைலில் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா யூ டியூப் வீடியோவைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார் கழுகார்.

‘‘ஓகோ… ‘பாயும் புலி… பதுங்கும் புலி’ என்று ஸ்டாலின் உறுமியிருப்பது பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கப் போகிறீராக்கும்?’’ என்று நாமும் சேர்ந்து சிரிக்க, செய்திக் கச்சேரியை ஆரம்பித்தார் கழுகார்.

Continue reading →

ஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்!

கடந்த சில வருடங்களாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது Stalking. காதலின் பேரில் பெண்களை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுவது, காதலிக்க மறுத்த பெண்களின்மீது அமிலம் வீசுவது, பொது இடங்களில் ஆயுதங்கள் மூலம் வன்முறையைப் பிரயோகிப்பது என கடந்த காலத்தில் நடந்த ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்கள், இந்த தேசத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். இன்டர்நெட்டின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களாக #CyberStalking-ம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறது. இதிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பது எப்படி?

Continue reading →

டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?

டி.டி.வி. தினகரன் கட்சியிலிருந்து தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறிவருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிகப் பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?

Continue reading →

பெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா?

பட்ஜெட் வரும்போதெல்லாம் சில புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்கிற பேச்சு பொதுவாக எழுந்து அடங்குவதுண்டு. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்குமுன்பு பலரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அது, பரம்பரைச் சொத்துக்கு வரி விதிப்பது (Inheritance tax). புலி வருது, புலி வருது என்கிற மாதிரி கடந்த காலத்தில் இந்த வரி வரவில்லை என்றாலும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் 2019-20-ம் ஆண்டுக்கான முழுபட்ஜெட்டில் இந்த வரி குறித்த வரி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Continue reading →