Advertisements

விவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்!

விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.  வழக்கின் முடிவில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தாய் அல்லது தந்தையிடம் குழந்தைகள் அனுப்பப்படுவார்கள். பெற்றோரின் விவாகரத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய சூழல்களில், அந்தக் குழந்தையின் உளவியல் மிகவும் பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவரிக்கிறார், உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

விவாகரத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்


தம்பதிக்குள் பெரிய அளவில் சண்டை வரும்போதெல்லாம், `விவாகரத்து கொடுத்துடுறேன்’, ‘விவாகரத்து வேணும்’ போன்ற வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பார்கள். அந்தப் பேச்சு வீட்டில் தொடர்ந்துகொண்டே இருந்தால், ‘இது நிஜமாகிவிடுமோ’ என்ற கவலையில் குழந்தையின் மனம் தடுமாறும்.

பெற்றோரின் சண்டைக்கான காரணம் புரியாவிட்டாலும், `ஒருவேளை பிரச்னைக்கு நாமும் காரணமாக இருப்போமோ?’ என்ற குற்ற உணர்வும் அவர்களுக்கு எழும்.

`பிரிந்து வாழும் முடிவில் இருக்கும் பெற்றோர், ஒருநாள் நம்மையும் கைவிட்டுவிடுவார்களோ (Separation Anxiety) என்ற அச்சமும் அவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். இந்த பயத்தால், அவர்கள் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாமல் எப்போதும் ஒருவிதப் பதற்றத்துடன் இருப்பார்கள்.

 

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிக்கலாம். படிப்பில் ஆர்வம் குறையலாம். தன்னம்பிக்கை குறையலாம். சமூகத்துடன் இணைந்து செயல்படுவதில் சுணக்கம் ஏற்படலாம். தனிமையைத் தேர்ந்தெடுக்கலாம்.

பெற்றோர் மீதான நம்பகத் தன்மை குறையும். ‘என் பிரச்னையை யாரிடம் சொல்வது?’ என்ற தவிப்பு நிச்சயம் குழந்தைக்கு ஏற்படும். அதனால், அந்தக் குழந்தை தவறான வழிகளுக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

டீன் ஏஜ் குழந்தைகளாக இருந்தால், இந்த விஷயத்தால் அதிகம் கோபப்படுவார்கள். தன் கோபத்தை வீட்டிலும் வெளியிடங்களிலும் பிரதிபலிப்பார்கள்.

அறிந்தோ அறியாமலோ பொய் பேசுதல், திருடுதல், புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களுக்கு அவர்கள் ஆளாகலாம். 

வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழக்கலாம். எதிர்கால வாழ்க்கை குறித்த அச்ச உணர்வு அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில்  நம்பிக்கையில்லாமல் போகலாம்.
 

நீதிமன்றச் சூழல் குழந்தைக்கு மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெற்றோரிடம்தான் இருக்கிறது தீர்வு!

தங்கள் விவாகரத்துப் பிரச்னையால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். எனவே, தம்பதிக்குள் நடக்கும் குடும்பச் சண்டையை உடனடியாகத் தீர்க்க முயல வேண்டும். தங்கள் சண்டை, குழந்தையை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தச் சண்டை விவாகரத்தை நோக்கிச் செல்லாமல் சமாதானமாக மாற வேண்டும்.

விவாகரத்துதான் ஒரே தீர்வு  எனும் சூழலில், தம்பதி நட்புடன் பிரிய வேண்டும். பிரிவுக்குப் பிறகு, குழந்தையின் நலன் சார்ந்த விஷயங்களில் இருவரும் முழுமையான அக்கறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

விவாகரத்துக்குப் பிறகு சிங்கிள் பேரன்ட்டாக, குழந்தை வளர்ப்பில் தடுமாற்றங்கள் ஏற்பட்டால், துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம். 

சிங்கிள் பேரன்ட்டுக்கு அப்பா, அம்மா இருவருக்கான ரோல்களையும் சேர்த்துச் செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கும். எனவே, பிஸியான வேலைச்சூழலிலும், குழந்தைக்கான நேரத்தை சிங்கிள் பேரன்ட் ஒதுக்கியே ஆக வேண்டும். பிரிந்திருக்கும் அப்பா/அம்மாவுக்குக் குழந்தைமீது உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கிடையிலான உறவுக்கும் தொடர்புக்கும் எவ்விதத் தடையும் விதிக்க வேண்டாம்.

சிங்கிள் பேரன்ட், தங்கள் குழந்தை பிரிந்திருக்கும் அதன் அப்பா/அம்மாவைத் தேடிவிடக் கூடாது என்று, அளவுக்கு மீறிய சலுகைகளைக் கொடுக்கக் கூடாது. நெகட்டிவ்வான விஷயங்களைக் குழந்தையிடம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தையின் நண்பர்கள் வட்டாரத்தை எப்போதும் கண்காணிக்க வேண்டும். பிள்ளையின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து உரையாடுவதையும் வழக்கப்படுத்தலாம்.

ஒருவேளை பிள்ளை தவறான பாதையில் சென்றால், அவரை நல்வழிக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, `நீயும் உன் அப்பா/அம்மாவைப்போலவே செய்றே. நீ உருப்பட மாட்டே’ போன்ற நெகட்டிவ் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.

சிங்கிள் பேரன்ட் தங்கள் குழந்தைகளுடன் பர்சனலாக உரையாட, தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். அதன் மூலம், குழந்தை மனதளவில் இயல்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: