Advertisements

கடன் வாழ்க்கை இனி இல்லை! – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்

டன் பிரச்னைக்கு ஏழை – பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வெல்லாம் கிடையவே கிடையாது. ஒருமுறை கடன்பட்டால், தொட்டுத் தொடரும் பாரம்பர்யமாய் ஒட்டிக்கொண்டுவிடும். அதனால்தான் எல்லோருமே கடன் இல்லாத வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறோம். ஆனால், அப்படியான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்துவிடாது என்பதுதான் யதார்த்தம்.

ஒருவர், தனது சக்திக்கு மீறி செலவு செய்யும் போதும் அடுத்தவரிடம் கடனாக பணமும் பொருளும் வாங்கும்போதும் கடனாளி ஆகிறார். இது, அவராக உருவாக்கிக்கொண்ட கடன். இன்னொரு கடனும் உண்டு. அது, பூர்வஜன்மக் கடன்; சம்பந்தப்பட்டவரின் மறுஜன்மம்வரை தொடரக்கூடியது.

இது எப்படி சாத்தியம். கடன் கொடுத்தவன் மறுபிறவியிலும் வந்து அதை கேட்பானா என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை!

பூர்வஜன்மக் கடன் என்பது, நாம் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட கடமைகளின் பாக்கி. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.எல்லா பெற்றோருமே தங்கள் பிள்ளைகளின்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் கண்ணில் தூசி விழுந்தாலும் துடிதுடித்துப் போவார்கள். இப்படிப்பட்ட பெற்றோரை, அவர்களது முதிய பருவத்தில் போஷிக்காமல்,  கண்டுகொள்ளாமல் புறக்கணித்தால், அது ஜன்மக் கடனாகிவிடும். இந்தக் கடனை மறுபிறவியிலாவது அடைத்தாகவேண்டும்.

கடன் வாழ்க்கை இனி இல்லை! - `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்

ஆக, ஒருவரிடம் பணம் மற்றும் பொருள் வாங்கி, அவற்றைத் திருப்பித் தராமல் விடுவதுதான் கடன் என்று கிடையாது; அன்பு, பாசம், நம்பிக்கை – இவற்றில் எதை நாம் பிறரிடமிருந்து பெற்றாலும் அதை அவர்களுக்குத் தராதபட்சத்தில், அதுவும் நம் கடன் பட்டியலில் சேர்ந்துவிடும்.

இன்னும் சிலர், தங்களின் நெருங்கிய நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பார்கள். இது, மிகப்பெரிய கடன். வினைப்பயன் எதுவாக இருந்தாலும், அதை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும்.

பொதுவாக, கடன் ஒருவரது வாழ்க்கையில் வருவதும் போவதுமாக இருக்கும் என்றாலும், சிலர் ஆயுள் முழுக்கக் கடனாளியாகவே இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். அவர்கள் எந்த வியாபாரம் செய்தாலும் கூடிய விரைவில் இழுத்து மூடிவிடுவார்கள்.

வியாபாரம்தான் என்றில்லை, வீடு அல்லது மனை வாங்கப்போகும் இடத்தில், தாய்ப் பத்திரத்தைச் சரியாகக் கவனிக்காமல் வில்லங்கத்தில் சிக்கி பெரும் பண இழப்பைச் சந்திப்பார்கள். 10 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 15 ரூபாய் கொடுத்து வாங்கி வருவார்கள்.

அடுத்தவர்கள் செய்யும் மூளைச் சலவையில் மயங்கி, பண இழப்பைச் சந்திப்பவர்களில் இவர்களுக்கே முதலிடம் எனலாம்.

இப்படி, எங்கே தொட்டாலும் பண இழப்பை ஏற்படுத்துகிற நஷ்ட ஜாதக அமைப்பைக் கண்டறிந்து, உரிய  பரிகாரங்கள் செய்துவந்தால், தொடர் பண இழப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் 2-ஆம் வீட்டுக்குரிய கிரகமான தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4-ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ, பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ… இப்படியான ஜாதக அமைப்புடன் பிறந்தவரின் ஜாதகம் நஷ்ட ஜாதகம் ஆகும்.

லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுவிழந்து, ஆனால் 6-க்கு உரியவன் வலுவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.

லக்னாதிபதியுடன் 6-க்கு உரியவன் இருந்தாலும், அந்த ஜாதகர் கடனாளியாகத்தான் இருப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் 6-ஆம் இடம் கடன், சத்ரு, நோய், விபத்து, வழக்கு ஆகிய ஸ்தானங்களைக் குறிக்கும். ஒருவர் கடனாளியாக இருப்பாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள, இதைத் தெளிவாக அறியவேண்டும்.

இனி, நஷ்ட ஜாதகம் அமைப்பைக் கொண்டவர் எந்தெந்த வகையில் கடனாளி ஆவார் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கடன் வாழ்க்கை இனி இல்லை! - `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்

6-க்கு உரியவனுடன் சூரியனோ, பிதுர் ஸ்தானாதிபதியோ சேர்ந்திருந்தால், தந்தையால் கடன் உண்டாகும். அதாவது, ‘எங்க அப்பாவுக்கு திடீர்னு கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சு. சொத்து முழுவதையும் விற்று வைத்தியம் பார்த்தே நாங்கள் கடனாளி ஆகிவிட்டோம்’ என்று யாரோ எப்போதோ நம்மிடம் சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம் இல்லையா… அப்படியொரு நிலை ஏற்பட, இந்த ஜாதக அமைப்புதான் காரணம்.

6-க்கு உரியவனுடன் சந்திரனோ, 4-ஆம் வீட்டுக்கு உரியவனோ சேர்ந்திருந்தால், தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் கடன் ஏற்படும்.

6-க்கு உரியவனுடன் செவ்வாயோ, சகோதர ஸ்தானாதிபதியோ சேர்ந்திருந்தால், உடன்பிறந்தவர்களால் கடன் ஏற்படும்.  சுக்கிரனோ 7-க்கு உரிய கிரகமோ சேர்ந்திருந்தால் வாழ்க்கைத் துணைவரால் கடன் பிரச்னை உருவாகும்.

குரு 5-க்கு உரியவனுடன் சேர்ந்திருந்தால், பிள்ளைகளால் கடன் உருவாகும். 5 அல்லது 12-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்திருந்தால், முன்ஜன்மக் கடன் ஏற்படும்.

6-க்கு உரியவனுடன் சனி சேர்ந்திருந்தால் வேற்று மொழி பேசும் அன்பர்களாலும் ராகு சேர்ந்திருந்தால் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவோராலும் கடன் ஏற்படும். கேது சேர்ந்திருந்தால் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளின் நடவடிக்கைகளால் கடன் ஏற்படும்.

இப்படி, கடனே வாழ்க்கையாகிப்போன நஷ்ட ஜாதகக்காரர்கள் சில பரிகாரங்கள் செய்தால், கடன் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

கடன் பிரச்னைகளுக்குத் தானம்தான் மிகச் சிறந்த பரிகாரம் ஆகும். இயன்ற பொருள்களைத் தானம் செய்யலாம். ஆசிரியராக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு இலவசமாகவோ, மிகக் குறைந்த கட்டணத்திலோ கல்வியைப் போதிப்பது சிறந்த பரிகாரமாகும்.

கடன் பிரச்னைகள் தீரவேண்டுமெனில் சம்ஹார திருத்தலங்களுக்குச் சென்று வழிபடலாம். குறிப்பாக, சஷ்டி தினங்களில்… ‘திருச்சீரலைவாய்’ எனப் புராணங்கள் போற்றும் திருச்செந்தூர் திருத் தலத்துக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது நல்லது. இயன்றால், வருடத்துக்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று, கந்தவேளை வழிபடுவதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

நம்மால் முடியும்போதெல்லாம் பசுவுக்கு உணவாக பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி ஆகியவற்றைத் தரலாம். இந்தப் பரிகாரங்களைச் செய்தால், கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதுடன், நமது வறுமை நிலை நீங்கி பொருளாதாரம் செழிக்கும்.

ஸ்ரீஸ்துதி

கடன் வாழ்க்கை இனி இல்லை! - `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்

ஸ்ரீவேதாந்த தேசிகரால் அருளப்பட்ட இந்தத் துதிப் பாடலை தினமும் படித்து வழிபட்டால், தரித்திரம் விலகும்; சகல சம்பத்துகளும் உண்டாகும்.

மானாதீதப்ரதித விபவாம் மங்களம் மங்களானாம்
   வக்ஷ: பீடீம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷானுஸ்ரவிகமஹிம ப்ரார்த்தினீனாம் ப்ரஜானாம்
   ஸ்ரேயோமூர்த்திம் ஸ்ரீயமஸரணஸ்த்வாம் ஸரண்யாம் ப்ரபத்யே

கருத்து: அளவிடமுடியாத மகிமையை உடையவளும், மங்கலப்பொருள்களுக்கெல்லாம் மங்கலம் அளிப்பவளும், மது எனும் அசுரனை அழித்த நாராயணரின் மார்பை தன் ஒளியால் அலங்கரிப்பவளும், இம்மை மறுமைக்கு நன்மை அளிப்பவளுமாகிய திருமகளைச் சரணடைகிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: