Advertisements

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்!

டிகைகள் எல்லாம் வானத்துலேருந்து குதிச்சவங்க இல்லை. நாங்களும் உங்களைப்போலத்தான். ஃபிட்னெஸ் விஷயத்துல நடிகைகளுக்கும் சாதாரணப் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் டெடிகேஷன். நாங்க தினமும் வொர்க் அவுட் பண்ணுவோம், டயட்டை ஃபாலோ பண்ணுவோம். ஆனா, நீங்க 29 நாள்கள் வொர்க் அவுட் பண்ணிட்டு, ஒரு ரிசல்ட்டும் இல்லைன்னு 30-வது நாள் அதை நிறுத்திடுவீங்க. ஒருவேளை நீங்க மனம் தளராம இருந்திருந்தால், அந்த 30-வது நாள்ல உங்க உடம்பு ரிசல்ட்டைக் காட்டத் தொடங்கியிருக்கலாம்’’ – நடிகை சினேகா ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார். 

உண்மைதான். எடைக்குறைப்பு விஷயத்தில் படித்தவர்களுக்கே சரியான புரிந்துணர்வு இல்லை. தோழி சொன்ன டயட்டையோ, வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பகிரப்படுகிற தகவல்களையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களே இங்கு அதிகம். எடைக்குறைப்பு முயற்சியில் இறங்க நினைப்பவர்களுக்கான முதல் தகுதி பொறுமை. அது இல்லாதவர்கள் எடைக்குறைப்புக்கு மட்டுமல்ல, எந்த லட்சியத்தையும் அடையத் தகுதியற்றவர்களே. ஏற்கெனவே கூறியது போல எடையைக் குறைப்பதில் குறுக்குவழிகளை யோசிக்க வேண்டாம்.

“எடைக்குறைக்கும் முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலைப் பற்றிய புரிந்துணர்வு இருக்க வேண்டும்’’ என்று சொல்லும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன், அடிப்படையான சில சந்தேகங்களைத் தெளிவாக்குகிறார்.

‘`எட்டு வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்தார் ஒரு பெண். சென்னையில் உள்ள அத்தனை ஜிம்களிலும் உறுப்பினராக இருந்தார். அவர் சந்திக்காத டயட்டீஷியன்களே இல்லை. ஆனாலும், எடை குறையவில்லை. உறவினரின் பேச்சைக் கேட்டு, முழு உடல் பரிசோதனைக்குச் சென்றிருக்கிறார். அதில் அவருக்கு ‘குஷிங் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை இருப்பது தெரியவந்திருக்கிறது. இது அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு. அவருக்கு பிட்யூட்டரி சுரப்பியிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிய பிறகே எடை குறையத் தொடங்கியது. அவரது அனுபவம், எடை குறையாததற்குக் காரணம் தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

எடைக்குறைப்பு முயற்சியே மருத்துவப் பரிசோதனைகளிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஃபிட்னெஸ் ட்ரெயினரைச் சந்திப்பதற்கு முன்பாக ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட்டைக் கலந்தாலோசிக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட், உங்களுக்கு ‘மஸ்குலோ ஸ்கெலிட்டல் அசெஸ்மென்ட்’ செய்வார். கூடவே நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பயிற்சிகளையும், தவிர்க்க வேண்டிய பயிற்சிகளையும் சொல்வார். உடற்பயிற்சி செய்யும்போது தேவையின்றி காயங்கள் பட்டுக்கொள்வதிலிருந்து உங்களைக் காப்பாற்றவே இந்த அட்வைஸ். மருத்துவரும் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட்டும் கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில், டயட் சார்ட் தயார்செய்வது டயட்டீஷியன் களுக்கும் எளிதாக இருக்கும்.

 

எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏன்?

வெற்றிகரமாக எடைக் குறைப்பு முயற்சியில் இறங்கிவிட்டீர்களா? எடையில் மாற்றத்தைப் பார்த்து மனம் குளிர்ந்திருக்கும்நிலையில், திடீரென ஒருநாள் வெயிட் மெஷின் உங்களை பயமுறுத்தலாம். சில கிலோ கூடியிருப்பதைப் பார்ப்பீர்கள். எங்கே தவறு நடந்திருக்கும் எனக் குழம்புவீர்கள். எடையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் சில காரணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 • பீரியட்ஸ் தொடங்குவதற்கு முன் எடை கொஞ்சம் அதிகரிக்கலாம். சில பெண்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே இரண்டு மூன்று கிலோவரை எடை அதிகரிப்பு இருக்கும். இந்த எக்ஸ்ட்ரா எடையானது உடலில் சேர்ந்திருக்கும் நீரின் எடைதான், பயப்பட வேண்டாம். சிலருக்கு அதிக கார்போஹைட்ரேட் உணவுகளான பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், கேக், ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீது திடீர் ஈர்ப்பு ஏற்பட்டு சாப்பிடுவார்கள். அதுவும் எடையை அதிகரிக்கலாம்.

 • ஃபைப்ராய்டு மற்றும் பிசிஓடி இரண்டுமே எடையில் தாறுமாறான ஏற்ற இறக்கங்களைக் காட்டக்கூடியவை. நாளமில்லா சுரப்பியியல் மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

 • உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும். வெரைட்டி ரைஸ், வற்றல், வடகம், முறுக்கு, சிப்ஸ், சாஸ், கெட்சப், ஊறுகாய், தொக்கு, கருவாடு, காய்ந்த நார்த்தங்காய், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ், சாலட் டிரெஸ்ஸிங் போன்றவை அதிக உப்புச்சத்து கொண்டவை. அதிகப்படியான சோடியம், உடலின் நீர்ச்சத்தைத் தேக்கிவைத்து, எடையை அதிகரித்துக் காட்டும்.

 • போதுமான அளவு தண்ணீர் குடிக்கா விட்டாலும், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டாலும் வயிறு கனத்து உப்புசமும் மலச்சிக்கலும் ஏற்படும். குடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. உங்கள் உணவில் முழுத்தானியங்கள், நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் அவசியம் இடம்பெற வேண்டும். ஆளிவிதை பவுடர், கோதுமைத் தவிடு, ஓட்ஸ் தவிடு போன்றவை எக்ஸ்ட்ரா நார்ச்சத்துக்கு உதவும்.

 • அரிசி, கிழங்கு வகைகள், சன்னா, ராஜ்மா போன்று கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள் ஆற்றலுடன், நீர்ச்சத்தையும் சேமித்துவைக்கக் கூடியவை. சேமித்துவைக்கப்படுகிற கார்போஹைட்ரேட், ‘கிளைகோஜென்’ எனப்படுகிறது. ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டுடனும் 3 கிராம் நீர்ச்சத்தும் சேமித்துவைக்கப்படும். இதுவும் எடையை அதிகரித்துக் காட்டும்.

 

ஒவ்வொருமுறையும் ஒரே நேரத்தில் எடையைச் சரிபார்க்க வேண்டும். காலை முதல் இரவு வரை எடையில் மாறுதல்கள் இருக்கும். ஹார்மோன்களும் உணவுகளும் எடையை பாதிக்கலாம். அடுத்தமுறை எடை பார்க்கும்போது நேரத்தையும், அணிந்திருக்கும் உடையையும் கவனியுங்கள். ட்ராக் பேன்ட்,டி-ஷர்ட் மாதிரியான கனமில்லாத உடைகளை அணிந்து எடை பார்ப்பது சிறந்தது.
 • மனநலப் பிரச்னைகள், குழந்தையின்மை போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் எடை அதிகரிக்கலாம்.கடுமையான ஒவ்வாமை காரணமாக வயிற்று உப்புசமும், கனத்த உணர்வும் ஏற்படும். இதனாலும் எடை கூடும்.

 • மதுப்பழக்கம் இருந்தால் கொழுப்பு உடைகிற செயல்பாடு சரியாக நடக்காது. சிந்தனை மாறும். சர்க்கரை அளவு குறைவதால் பசியெடுக்கும். வழக்கத்தைவிட அதிக அளவு சாப்பிடுவார்கள். புளிக்கவைக்கப்பட்ட பார்லியிலிருந்து பெறப்படுவதால் பியர் அருந்தும்போது, பார்லியிலுள்ள குளூட்டன் வயிற்று உப்புசத்தையும் வாய்வையும் ஏற்படுத்தும். இடுப்பின் அளவு அகலமாகும். ரம், வோட்கா போன்றவையும் கலோரிகளை அதிகரிக்கும். ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்ப்பது மிக அவசியம்.

 • உடலில் சேரும் நச்சுகளாலும், அதிகப் படியான ரசாயனங்களாலும் எடைகூடலாம். பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்பெனால் ஏ ஓர் உதாரணம். டெஸ்ட்டோஸ் டீரான், இன்சுலின், தைராய்டு மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் செயல்பாடுகளை இது பாதிக்கும். காய்கறிகள், பழங்கள், மசாலா பொருள்கள், ஃபுட் கலர் போன்ற வற்றிலும் கெமிக்கல்கள் இருக்கின்றன. வீட்டைச் சுத்தப்படுத்தும் ஃப்ளோர் கிளீனர், அழகு சாதனங்களிலும்கூட அவை இருக்கின்றன. இவற்றின் பயன்பாடு ஹார்மோன்களின் இயக்கத்தை பாதித்து, எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

 • ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்டிசால் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பவர் களுக்கு வயிற்றைச் சுற்றி பருமன் அதிகரிக்கும். தியானம், யோகா, தாய்ச்சி போன்ற பயிற்சிகளின் மூலம் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கலாம். மன அழுத்தம் அதிகமிருக்கும்போது பளு தூக்கும் பயிற்சிகளையோ, ஹை இன்டென்சிட்டி இன்டர்வெல் (HIIT) பயிற்சிகளையோ செய்தால் ஸ்ட்ரெஸ் இன்னும் தீவிரமாகலாம்.

 • தடையில்லாத, ஆழ்ந்த உறக்கம்கூட எடையைக் குறைப்பதில் பெரிதும் உதவும். அப்படிப்பட்ட தூக்கம், உடலையும் மனதை யும் பழுதுபார்க்கும். ரத்தச் சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, எடை ஏறாமலும் காக்கும். நல்ல தூக்கத்துக்குக் காரணமான மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்க, மொபைல், லேப்டாப், டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். படுக்கையறையில் வெளிச்சம் ஊடுருவுவதைத் தவிர்க்க, அடர்நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். மாலை 4 மணிக்கு மேல் எனர்ஜி டிரிங்க், காபி, டீ போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.

 • ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எடையைச் சரிபார்க்க வேண்டும்.

 • எடை மெஷினில் ஏறி நின்று எடையைப் பார்ப்பதை மட்டுமே செய்யாமல், உடல் அளவுகளில் கவனம் செலுத்தலாம். கொழுப்பு குறைவாகவும், தசைகளின் அடர்த்தி அதிகமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியம்.

 • உங்கள் எடை, உயரம், தினசரி வேலை களுக்கேற்ற அளவே உணவு உட்கொள்ள வேண்டும். ஆரோக்கிய உணவுகள்தானே என்ற எண்ணத்தில் பழங்கள், நட்ஸ், பால் போன்றவற்றை அளவுக்கதிகமாக சாப்பிடுவதும் தவறுதான்.

 • காலையில் எழுந்ததும் இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவையும், காலை உணவு சாப்பிட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில் மதிய உணவையும், இரவு 7 மணிக்கு இரவு உணவையும் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் 3 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

இயற்கையான முறையில் எடையைக் குறைப்பதுதான் நிரந்தரமானது, ஆரோக்கிய மானது. எடையைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் ஆதிக்கம், புற்றுநோய் ஆபத்து, ரத்த அழுத்தம், நீரிழிவு என எல்லா பிரச்னைகளுக்கும் கொழுப்பே காரணம்.

உங்கள் உடலைப் புரிந்துகொள்ளுங்கள். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நன்றாக மென்று சாப்பிடுங்கள். உணவை உங்கள் உடலுக்கான எரிபொருளாக, மூளைக்கான தகவலாகப் பாருங்கள். நீங்கள் சாப்பிடுகிற உணவுக்கும் உங்கள் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மூளை, சிறுகுடல் மற்றும் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று இணைப்பில் இருப்பவை என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த இணைப்பு சீராகவும் சிறப்பாகவும் இருக்கவேண்டுமென்றால் உண்ணும் உணவும், அருந்தும் நீரும் சுத்தமானமாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையையும் புரிந்துகொள்ளுங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: