புடவை என்பது புடவை மட்டுமே அல்ல!

பாரம்பர்யப் புடவையில் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்து வெஸ்டர்ன் லுக் கொடுப்பதுதான் இன்றைய பெண்களின் சாய்ஸ். புடவைகளை வெஸ்டர்ன் டைப்பில் வித்தியாசமாக உடுத்துவது எப்படி, அதற்கான பிளவுஸ்கள், அக்சஸரீஸ் ஆகியவற்றை எப்படித் தேர்வுசெய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவல்களைத் தருகிறார், சென்னை ‘மெர்சல் பொட்டீக்’கின் உரிமையாளர் நந்திதா.

வெஸ்டர்ன் லுக்!

வெஸ்டர்ன் லுக்

வெஸ்டர்ன் லுக்

ஜீன்ஸுடன் ஜார்ஜெட் புடவையை, நடுவில் ஸ்லிட் வருவதுபோல உடுத்திக்கொள்வது இன்று பெண்கள் பலரின் சாய்ஸாக உள்ளது. பிளவுஸை ஹை நெக், நெட்டட் ஸ்லீவ், பெல்ட் காம்போ என்று வடிவமைத்துக்கொண்டால் கூடுதல் அழகாக இருக்கும். ஜீன்ஸ் அணிந்து புடவை கட்டுகிறீர்கள் எனில், கிராப் டாப் அணியலாம். நெக் பீஸ் தவிர்க்கவும்.

சிம்பிள் லுக் – டிரெண்டி டச்!

சிம்பிள் லுக் - டிரெண்டி டச்

சிம்பிள் லுக் – டிரெண்டி டச்

சாட்டின் புடவையிலும் டிரெண்டுக்கேற்ப உங்களை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள முடியும் என்றால் நம்புவீர்களா! உடலின் மேல்பகுதியில் ஹாஃப் ஷோல்டர் டைப்பிலும், கீழ்ப்பகுதியில் பென்சில் ஸ்கர்ட் போன்றும் புடவையை டிரேப் செய்து, புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் ஆல்ட்டர் நெக் பிளவுஸ் அணிந்தால், ஆஸம்! ஆல்டர் நெக் விரும்பாத பெண்கள் ஹை-காலரில் பிளவுஸை வடிவமைத்துக்கொள்ளலாம். பருமனான பெண்கள் எனில் ஃபுல் ஸ்லீவ் நெட்டட் பிளவுஸைத் தேர்வு செய்யலாம். ஹாஃப் ஷோல்டர் டைப்பில் புடவை கட்டிக்கொள்கிறீர்கள் எனில், கிராண்டான சோக்கர் அணிந்துகொள்ளலாம். இந்த சிம்பிள் அண்டு நீட் லுக், ரிசப்ஷன், சங்கீத், கல்லூரி நிகழ்ச்சிகளில் உங்களை ஹைலைட் செய்யும்.

ரஃபிள் லுக்!

ரஃபிள் லுக்

ரஃபிள் லுக்

சாதாரண புடவையையே கொஞ்சம் கிராண்டாக உடுத்த விரும்பும் பெண்களுக்கு, ரஃபிள் புடவைகள் பொருத்தமாக இருக்கும். உங்கள் புடவையில் உள்ள பார்டர்களை கட் செய்து எடுத்து, புடவை நிறத்துக்கு சற்று கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் ஃப்ரில் போன்று பார்டர்வைத்துத் தைத்தால், நீங்கள்தான் டிரெண்ட் செட்டர். காட்டன் புடவைகள் ரஃபிள் லுக்குக்குக் கூடுதல் அழகைத் தரும். காட்டன் புடவையில் ரஃபிள் வைக்க, நெட், ஜார்ஜெட், கிரேப், ஷிஃபான் போன்ற மெட்டீரியல்களைப் பயன்படுத்தலாம். ரஃபிள் டிசைன் புடவைகளுக்கு ரவுண்டு நெக், போட் நெக் போன்ற பிளவுஸ் டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக, டி-ஷர்ட் அணிந்துகூட இந்தப் புடவையை உடுத்திக்கொள்ளலாம். நெக் பீஸ் தவிர்த்து, கிராண்டான கம்மல்கள் அணிய வேண்டும். மாடர்ன் லுக்கில் அசத்தும் இந்த டைப் புடவை மாலை நேர நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான தேர்வு.

புடவை அண்ட் ஸ்கர்ட்!

நந்திதா

நந்திதா

ங்களிடம் உள்ள புடவைகளில் பார்டர்களைக் கத்தரித்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக புடவையின் நிறம் மற்றும் டிசைனுக்கு கான்ட்ராஸ்ட்டான மெட்டீரியலை ஸ்கர்ட் டிசைனில் அட்டாச் செய்துவிட்டால், டிரெண்டில் கலக்கலாம். வித்தியாசமான லுக் என்பதால் டி-ஷர்ட்டுடன்கூட இந்தப் புடவையை அணிந்துகொள்ளலாம். இந்த ஸ்கர்ட் புடவை, உயரமான பெண்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதை நோட் ப்ளீஸ்.

கைத்தறிப் புடவை வெஸ்டர்ன் லுக்கில்!

கைத்தறிப் புடவை வெஸ்டர்ன் லுக்

கைத்தறிப் புடவை வெஸ்டர்ன் லுக்

பாரம்பர்யமான கைத்தறிப் புடவையை டிரெண்டி லுக்கில் உடுத்த ரெடியா? அதற்கு, பிளவுஸ்களை பீட்டர் பேன், க்ளோஸ் நெக், ஹை-காலர் என வடிவமைத்துக்கொள்ளவும். பிளவுஸின் நிறத்தில் மேட்ச்சிங்காக ஒரு பெல்ட்டையும் வடிவமைத்துக்கொண்டால், போல்டு லுக்கில் மாடர்ன் மங்கையாக வலம் வரலாம். இந்தப் புடவை பெல்ட்டை பல புடவைகளுடனும் மிக்ஸ் மேட்ச் செய்து கொள்ளலாம். ஆன்டிக் கம்மல்கள் இந்த லுக்கை இன்னும் மெருகேற்றும். எந்த நிகழ்ச்சிக்கும் இந்த உடையை அணிந்து செல்லலாம், தனிக் கவனம் பெற்றுத்தரும்.

%d bloggers like this: