மைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை!

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளில், பெரும்பாலான உணவுகள், பதப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் கிடைக்கும். வீட்டிலும், குறிப்பிட்ட நாளைக்கு ஒரு முறை, சமைத்து, பிரிஜில் வைத்து விடுவர்; நினைத்த நேரத்தில், சாப்பிடுவர். அவர்களின் இந்த உணவுப் பழக்கத்தால், அதிக உடல் எடையுடன் குழந்தைகள் இருப்பர்.
இரண்டு வயதிற்குள்ளாகவே, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறுகள், சுவாச, சிறுநீரகப் பிரச்னைகள், துாக்கத்தில் குறட்டை, மூட்டு வலி போன்ற பிரச்னைகள், இருப்பதைப் பார்க்கலாம். இப்பொழுது, நம் நாட்டிலும், கிராமங்கள் வரை, இந்த உணவுப் பழக்கம் வந்து விட்டது. விளைவு, நம் குழந்தைகள், அவர்களை விடவும், உடல் பருமனால் வரும் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண் குழந்தைக்கு, இதனுடைய தாக்கம் அதிகம் இருக்கும். மாதவிடர்ய் சிறு வயதிலேயே வந்து விடும். மனப் பிரச்னைகளும் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. குண்டாக இருக்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பர்; தாழ்வு மனப்பான்மை வந்து விடும். பள்ளிகளில், மைதானங்கள் இருந்த வரையிலும், உடல் பருமன் என்பதே இருந்ததில்லை.

%d bloggers like this: