சிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்!

சிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்!

சிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்!

சீந்தில்… அமிர்தம்போல் உடலைப் பாதுகாக்கக்கூடியது என்பதால் இதற்கு ‘அமிர்தவல்லி’ என்ற பெயரும் உண்டு. கொடிவகைத் தாவரம். சித்த மருத்துவத்தில் ‘அமிர்தக்கொடி’ என்று இதைச் சொல்வார்கள். இந்த மூலிகையின் இலை, தண்டு, வேர்ப் பகுதிகளைச் சூரணம், சர்க்கரையாக மாற்றி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

சிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்!

• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை, செல்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

• ரத்த அணுக்களிலுள்ள தொற்றுகளை நீக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நீர் வேட்கையைக் குறைக்கும். உடல் சோர்வு, எடை குறைதல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.

• செரிமான உறுப்புகளை வலிமைப்படுத்தும். வீக்கத்தைக் குறைப்பதுடன், நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையும் சீந்திலுக்கு உண்டு.

• சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். டெங்கு, பன்றிக்காய்ச்சல், மலேரியா போன்றவற்றின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.

• மூச்சுத்திணறல், இருமல், இரைப்புப் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும்.

• இதன் தண்டைப் பொடிசெய்து, இஞ்சி சேர்த்துச் சாப்பிட்டால் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ், மூட்டுகளை பாதிக்கும் வாதநோய் போன்றவை குணமாகும்.

• சீந்தில் சாறு, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

• கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குப் பாலூட்டும் பெண்கள் இந்த மூலிகையைப் பயன்படுத்தக் கூடாது.

– எம்.மரிய பெல்சின்

%d bloggers like this: