Advertisements

நாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே!

இப்போது, நாப்கினுக்கு மாற்றாக டேம்பான்ஸ்,மென்சுரல் கப், பேன்டி லைனர், ஓவர் நைட் பேன்ட்டீஸ் போன்றவை சந்தைக்கு வந்துள்ளன.

மாதவிடாய்

மாதவிடாய் சமயத்தில் துணி மற்றும் நாப்கின் பயன்பாடுதான் பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது. ஆனால், 15 வருடங்களுக்கு முன் நாப்கின் அறிமுகமான நேரத்தில், துணியிலிருந்து நாப்கினுக்கு மாறுவதற்கே பல பெண்கள் தயக்கம் காட்டினார்கள். துணியைக் காட்டிலும் நாப்கின் கூடுதல் பாதுகாப்பு என்றாலும், நாப்கின் ஏற்படுத்தும் அலர்ஜி மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் பற்றி பெண்களிடம் நிறையவே பயம் மற்றும் சந்தேகங்கள் இருந்தன. காலப்போக்கில் அதில் தெளிவுபெற்று எல்லோருமே நாப்கின் பயன்பாட்டிற்கு மாறிவிட்டனர்.

நாப்கின்

இப்போது, நாப்கினுக்கு மாற்றாக டேம்பான்ஸ்,மென்சுரல் கப், பேன்டி லைனர், ஓவர் நைட் பேன்ட்டீஸ் போன்றவை சந்தைக்கு வந்துள்ளன. இவற்றையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது, யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல்களை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா.

பேன்ட்டி லைனர்

பொதுவாக, மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் முன்னெச்சரிக்கைக்காக இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் நாப்கின் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். சில பெண்கள், வெள்ளைப்படுதல் பிரச்னைக்காகவும் நாப்கின் பயன்படுத்துவார்கள். மாதவிடாய் வருவதற்கு முன், மாதவிடாய் சமயம், மாதவிடாய் முடிந்த சில தினங்கள் எனத் தொடர்ந்து நாப்கின் பயன்படுத்துவதால் அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. முன்னெச்சரிக்கையாக நாப்கின் பயன்படுத்தும் சமயத்தில் பேன்டி லைனர் உபயோகப்படுத்தலாம்.

பேன்ட்டி லைனர் என்பது சிறிய சைஸ் நாப்கின் போன்றுதான் இருக்கும். அடர்த்தி குறைவாக இருப்பதால் பிறப்புறுப்பை அழுத்தாது.

மகப்பேறு நல மருத்துவர் ஆனந்தப்பிரியா

பேன்ட்டி லைனர் பயன்படுத்தும் முறை:

வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்களும் இதனைப் பயன்படுத்தலாம். ஒரு முறை பேன்ட்டி லைனரை உங்கள் உள்ளாடையில் பொருத்துகிறீர்கள் எனில், ஏழு மணி நேரம்வரை வைத்துக்கொள்ளலாம். கெமிக்கல் கலக்காத பேன்ட்டி லைனர்களை வாங்கிப்பயன்படுத்துவது ஆரோக்கியமானது. உங்கள் உள்ளாடையின் அளவுக்கு ஏற்ற பேன்ட்டி லைனர்களை தேர்வுசெய்து வாங்குவது அவசியம். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கை சமாளிக்க பேன்ட்டி லைனர்கள் கை கொடுக்காது.

டேம்பான்ஸ்:

டேம்பான்ஸ் என்பது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கை சமாளிக்க, பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளப்படும் நாப்கின் என்று சொல்லலாம். நீளமாக பருத்திப் பஞ்சுகள் சுத்தப்பட்டு இருக்கும் டேம்பான்ஸை மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்வதன் மூலம் டேம்பான்ஸில் உள்ள பருத்தி, ஈரத்தை உறிஞ்சுக்கொள்ளும். மாதவிடாய் சமயத்தில் முதல் மற்றும் இறுதி நாள்களுக்கு டேம்பான்ஸ் ஏற்றது. மாதவிடாயின் இரண்டாவது நாளில் பயன்படுத்துகிறீர்கள் எனில், டேம்பான்ஸை அடிக்கடி மாற்றவேண்டிய சூழல் வரும். அதனால் டேம்பான்ஸை மாதவிடாயின் இரண்டாவது நாளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

டேம்பான்ஸ்

டேம்பான்ஸ்

டேம்பான்ஸ் பயன்படுத்தும் முறை:

பிறப்புறுப்பிற்குள் வைக்கும் ஒரு சாதனம் என்பதால் திருமணம் ஆகாத பெண்கள் தவிர்ப்பது நல்லது.

கால்களை அகல விரித்து நின்றுகொண்டோ, குத்துக்கால் இட்டோ டேம்பான்ஸை பிறப்புறுக்குள் செலுத்த வேண்டும்.

ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை டேம்பான்ஸை மாற்றுவது அவசியம்.

முழுக்க முழுக்க காட்டன் என்றாலும் பிறப்புறுப்பில் பொருத்தும்போது எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொற்று நோய்கள், அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

டேம்பான்ஸ் வாங்கும்போது, திருமணம் ஆகாத பெண்கள் எனில் X என்ற அளவிலும், திருமணமான பெண்கள் எனில், XX என்ற அளவிலும் வாங்க வேண்டும். குழந்தை பெற்ற சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கைத் தவிர்க்க டேம்பான்ஸ் பயன்படுத்தக் கூடாது. இது, உடலில் கூடுதல் தொற்று மற்றும் காயங்களை ஏற்படுத்தும்.

ஓவர் நைட் பேன்ட்டீஸ்:

இது, நாப்கின் கலந்த பேன்ட்டீஸ். பார்ப்பதற்கு டயப்பர் போன்று இருக்கும். நாப்கின் போன்று இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிகப்படியான உதிரப்போக்கு உடையவர்களுக்கு, இது பெஸ்ட் சாய்ஸ். இரவு நேரங்களில் இதனைப் பயன்படுத்துவது சிறந்தது.

மாதவிடாய்

மாதவிடாய்

S, M, X, XX ஆகியவற்றிலிருந்து, உங்கள் இடுப்பின் அளவுக்கு ஏற்ற அளவில் கேட்டு வாங்க வேண்டும்.

டயப்பர் போன்று இருக்கும் ஓவர் நைட் பேன்ட்டீஸ் அணிந்து, அதற்கு மேல் உள்ளாடை அணிந்துகொள்வது கூடுதல் பாதுகாப்பு.

அதிகப்படியான உதிரப்போக்கைத் தாங்கும் என்றாலும் 6 மணிநேரத்திற்கு ஒரு முறை மாற்றிவிடுவது நல்லது.

மென்சுரல் கப்

மென்சுரல் கப் என்பது மாதவிடாய் சமயத்தில் பெண்களின் பிறப்புறுப்பின் உள்ளே வைத்து பயன்படுத்தக்கூடியது .கூம்பு வடிவத்தில் சிலிகான் மெட்டீரியலில் உருவாக்கப்பட்டிருக்கும் இதனைப் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்வதன்மூலம் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் துர்நாற்றம், அலர்ஜி போன்றவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

மென்சுரல் கப் பயன்படுத்தும் முறை:

இது, பிறப்புறுப்புக்குள் வைக்கப்படும் ஒரு பொருள் என்பதால், திருமணம் ஆகாத பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவது இல்லை.

S, M, X, XX எனப் பல அளவுகளில் கிடைக்கின்றன. எனினும் முதலில் S என்ற அளவில் வாங்கி பயன்படுத்திப்பாருங்கள் அது அசெளகரியமாக இருந்தால், அடுத்தடுத்த முறை அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். ஒரு முறை வாங்கும் மென்சுரல் கப்பை ஐந்தாண்டு வரை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு 5 மணிநேரத்திற்கு ஒரு முறை கப்பை வெளியே எடுத்து, அதில் சேர்ந்திருக்கும் ரத்தத்தை அப்புறப்படுத்துவது அவசியம். ஒவ்வொரு நாள் இரவும் மென்சுரல் கப்பை கொதிக்கும் நீரில் இட்டு சுத்தப்படுத்தி, மீண்டும் பயன்படுத்தலாம்.

குத்துக்கால் இட்டு கால்களை அகற்றி, கப்பை பிறப்புறுப்புக்குள் பொருத்த வேண்டும். அதேபோன்று, கப்பை மீண்டும் வெளியே எடுக்கும் சமயத்தில், கப்பின் அடிப்பகுதியில் நீளமாக இருக்கும் குச்சி போன்ற பகுதியைப் பிடித்து, கப்பின் மேல்பகுதியை அழுத்தி, கப்பை வெளியே எடுக்க வேண்டும்.

பிறப்புறுப்பைச் சுத்திகரிக்க:

பிறப்புறுப்பு

பிறப்புறுப்பு

பிறப்புறுப்பை சுத்தப்படுத்த, தண்ணீர் தவிர்த்து வேறு திரவத்தை பயன்படுத்தக் கூடாது. கெமிக்கல்கள் இல்லாத ஈரமான வெட் வைப்ஃஸ் பயன்படுத்தலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: