Advertisements

விளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு!

அந்தக்காலத்தில் விளக்கு ஏற்றும் எண்ணெய் தயாரிக்க வேண்டிய மூலப்பொருள்களை விளைவிக்க மட்டுமே நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்து இறைக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர் அரசர்கள். இதற்குச் சான்றாக பல கல்வெட்டுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தெய்வ வழிபாட்டில் தீபமேற்றி வழிபடும் சடங்கு நம் வழக்கங்களில் ஒன்றாக இருந்துவந்ததை இது தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாது எல்லாவித எண்ணெயையும் ஊற்றி நம் மக்கள் தெய்வத்துக்கு தீப வழிபாடு செய்ததில்லை, மாறாக குறிப்பிட்ட வகை எண்ணெய்களை மட்டுமே மிகத் தூய்மையாக தயாரித்து பயன்படுத்திவந்தனர். காரணம், அக்காலத்தைய கடுமையான தெய்வ அனுஷ்டான விதிகள் அப்படி…

இப்போதெல்லாம் இப்படிக் கடுமையான இறை வழிபாட்டுக் கொள்கைகளை யாரும் கடைப்பிடிப்பதாய்த் தெரியவில்லை, இதைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக்கி காசு பார்க்கும் வேலையில் இறங்கிவிட்டனர். ஆம், விளக்கேற்றும் எண்ணெயில் தான் இந்த அநியாயம் அரங்கேறி வருகிறது… கடைக்குச் செல்கிறோம், ‘விளக்கு ஏற்றும் எண்ணெய் வேண்டும்’ எனக் கேட்கிறோம், ஒரு நல்ல பிராண்டின் பெயரைச் சொல்லி அந்த எண்ணெயைக் கேட்க, கடைக்காரர் தன் கைவசமுள்ள பிறிதொரு மலிவு விலை எண்ணெயைக் கொடுக்கிறார். ‘குறைந்த விலையாக உள்ளதே!’ எனப் பெயர் தெரியாத ஏதோவொரு கம்பெனி பெயர் பொறிக்கப்பட்ட விளக்கு ஏற்றும் எண்ணெயைக் கப் சிப் என வாங்கி வந்துவிடுகிறோம்.

விளக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

தூய்மையான பூஜைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டியது நம் கடமை. பாமாயில் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களைக்கொண்ட தரமற்ற போலி விளக்கேற்றும் எண்ணெய்களில் விளக்கேற்றுவதைத் தவிர்த்து, தரமான தீப எண்ணெய்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களைச் சரியான விகிதத்தில் கலந்து வழங்கப்படும் ‘தீபம்’ பிராண்ட் பஞ்ச தீப எண்ணெய் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. இதில் சுகந்த திரவியங்கள் இருப்பதால் விளக்கேற்றும்போது வரும் தெய்வீகமான நறுமணம் நமக்கு தெய்வீக உணர்வைக்கொடுக்கிறது, இதற்குக் காரணம் தூய்மைதான்! சிறந்த நிறம், நறுமணம் மற்றும் சரியான பாகுத்தன்மை கொண்டது ‘தீபம்’ பஞ்ச தீப எண்ணெய், நீண்ட நேரம் நீடித்து எரியக்கூடிய தன்மையும் புகையின்மையும் இதன் சிறப்பம்சங்களாகும். நீங்களும்கூட ‘தீபம்’ எண்ணெயில் விளக்கேற்றி இதை அறிந்துகொள்ளலாம்!

Advertisements
%d bloggers like this: