உச்சி முதல் பாதம் வரை
கூந்தலுக்கு…
-
ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் வறண்ட கூந்தலுக்கு மிகச் சிறந்த மருந்து. இவற்றிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கூந்தல் வறட்சியைப் போக்கி உடைந்த நுனிகளையும் சரி செய்யக்கூடியது. கால் டீஸ்பூன் ஆளி விதைகளை அரைத்து அந்த விழுதுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். முடிகளின் வேர்கள் வலுப்பெறும். முடி உதிர்வது நிற்கும். கூந்தலின் பளபளப்பு கூடும். கொழுப்பை நீக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் ஆளி விதை ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.