டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

ரு டீயைக் குடிச்சிட்டு வேலையைப் பார்ப்போமா?’ பணியிடங்களில் அன்றாடம் ஒலிக்கும் வாசகம் இது. கடுமையான வேலைக்கு நடுவில், முழு மூச்சாகப் பரீட்சைக்குப் படிக்கும் இடைவெளியில் ஒரு கப் டீ நமக்குத் தருவது இதம், ஆசுவாசம், புத்துணர்ச்சி. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத பானம். தெருவுக்கு ஒன்றாக முளைத்திருக்கும் தேநீர்க் கடைகள் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. `டீ நல்லதா, கெட்டதா?’ என்று கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வது மிகக் கடினம். ஆனால், `அளவுக்கதிகமாக டீ குடிப்பவர்களுக்கு டீஹைட்ரேஷன், ரத்தச்சோகை மற்றும் இதய பாதிப்பு ஏற்படலாம்’ என்கின்றன சில ஆய்வுகள்.

 

“ஒரு நாளைக்கு எவ்வளவு டீ குடிக்கலாம், அளவுக்கதிகமாக டீ குடிப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?’’ இரைப்பை மற்றும் குடல்நோய் மருத்துவர் ஜீவன்குமாரிடம் கேட்டோம்.

“வாழ்வியல்நோய்கள் அல்லது நாள்பட்டநோய்கள் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு மூன்று கப்வரை டீ குடிக்கலாம். ஒரு கப் டீ என்பது, 150 மி.லி. டீயில் சேர்க்கப்படும் சர்க்கரைதான் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அதைத் தவிர்க்கலாம் அல்லது அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஏதேனும் வாழ்வியல்நோய் பாதிப்பு இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி டீயின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

அளவுக்கதிகமாக டீ குடித்தால் இரைப்பை, குடல் அழற்சி, தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு, அதிக ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிப்பதுடன் நெஞ்செரிச்சல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அளவுக்கதிகமாக டீ குடித்தால், அதிலுள்ள தியோபுரோமைன் (Theobromine), தியோபிலின்

(Theophylline) போன்ற அமிலங்கள் இரைப்பையின் அமிலத் தன்மையை அதிகரிக்கும். இதனால் வயிற்றின் உட்பகுதிச் சுவர் (மியூக்கஸ்) பாதிப்படைந்து, உபாதைகள் ஏற்படும். பால் மற்றும் வெள்ளைச் சர்க்கரையிலுள்ள கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து போன்றவை உடல் பருமனில் தொடங்கி உடல் சோர்வுவரை பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்” என்கிறார் ஜீவன்குமார்.

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

‘`திடீரென்று டீ குடிப்பதை நிறுத்தினால் தலைவலி, தலைச்சுற்றல், மலச்சிக்கல், உடல் சோர்வு, குமட்டல், பதற்றம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதாகச் சொல்கிறார்களே… அதற்கு என்ன செய்யலாம்?’’ என்று டயட்டீஷியன் வாணியிடம் கேட்டோம்.

“டீயை மனதுக்கு நெருக்கமான ஒன்றாகப் பார்ப்பவர்களால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் மீள முடியாது. திடீரென்று டீ குடிப்பதை நிறுத்தினால் சில பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய நிலையை ‘வித்டிராயல் சிண்ட்ரோம்’ (Withdrawal Syndrome) என்போம். அளவுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு, டீ குடிக்கும்போது கூடுதலாகச் சில பழக்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக டீயுடன் சேர்த்து நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது, புகைபிடிப்பது, பிஸ்கட் சாப்பிடுவது போன்றவை. இவர்கள், டீ பழக்கத்தைக் கைவிடும்போது கூடுதலாக இந்தப் பழக்கங்களையும் கைவிட வேண்டியிருக்கும்.

மாடல்: டாக்டர் மம்தா

மாடல்: டாக்டர் மம்தா

இங்குதான் பிரச்னை தொடங்கும். எந்தவொரு நீண்டகால பழக்கத்தையும் முழுமையாக விட முயலும்போது, உடல் அதை ஏற்றுக்கொள்ளத் திணறும். உடலில் ஏற்படும் சில ஊட்டச்சத்து மாற்றங்களையும் கடந்துவர வேண்டியிருக்கும். டீ மற்றும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், முதலில் மனதளவில் அவை இரண்டிலுமிருந்து தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டுவர வேண்டும்.

`டீ குடிக்க வேண்டும், புகைபிடிக்க வேண்டும் அல்லது நொறுக்குத்தீனிகள் / பிஸ்கட் சாப்பிட வேண்டும்’ என்று தோன்றும்போதெல்லாம் ஆரோக்கியமான வேறு ஏதேனுமொரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, சில நிமிடங்களுக்கு மூச்சுப்பயிற்சி செய்வது, பாடல் கேட்பது, நடைப்பயிற்சி, ஊட்டச்சத்துமிக்க வேறோர் உணவைச் சாப்பிடுவது போன்றவற்றைச் செய்து வர வேண்டும். மாற்று டீ வகைகளை அருந்தலாம். அவை ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும். அப்படிச் சில டீ வகைகளையும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம்.

இஞ்சி டீ

நன்மைகள்:

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

1.செரிமானப் பிரச்னைகளைக் குறைக்கும்.

2.தலைச்சுற்றல், மயக்கத்தைத் தவிர்க்கும்.

3.உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

4.அழற்சிப் பிரச்னைகளைத் தடுக்க உதவும்.

5.ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

6. மூச்சுக்குழாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.

குறிப்பு:

1.காலையில் எழுந்ததும் இந்த டீயைக் குடிப்பது நல்லது.

2.துத்தநாகம், ஃபோலேட், வைட்டமின் சி, பி 3 மற்றும்

பி 6, மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன.

கெமோமைல் டீ (Chamomile Tea)

நன்மைகள்:

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

1.மன அழுத்தத்தைக் குறைக்கும்.

2.தூக்கமின்மை பிரச்னையைத் தீர்க்கும்.

3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

4.மாதவிடாய்க் கால வலிகளைக் குறைக்கும்.

5.தலைவலிக்குத் தீர்வு கிடைக்கும்.

6.சரும ஒவ்வாமைகளைத் தடுக்கும்.

7.வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கும்.

8.ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

குறிப்பு:

1. இரவு நேரத்தில் இந்த டீயைக் குடிப்பது நல்லது.

2.இதில் வைட்டமின் டி, மக்னீசியம் சத்துகள் நிறைந்துள்ளன.

இஞ்சி – லெமன் டீ

நன்மைகள்:

1. எலுமிச்சையின் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி (Anti Inflammatory) தன்மை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

2. சளி, காய்ச்சல் பிரச்னைகளைப் போக்கும்.

3. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

4. சருமப்பொலிவுக்கு உதவும்.

5. சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.

6. அதிக உடலுழைப்பால் ஏற்பட்ட தலைவலி, உடல்வலி குறைய உதவும்.

குறிப்பு:

1. காலை நேரத்தில் இந்த டீயைக் குடிக்கலாம்.

2.எலுமிச்சையில் வைட்டமின் ஏ, சி சத்துகள் உள்ளன.

பெப்பர்மின்ட் டீ (Peppermint Tea)

நன்மைகள்:

1. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி சத்துகள் நிறைந்துள்ளன.

2. மன அமைதிக்கு வழிவகுக்கும்.

3.உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

4.செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும்.

5.தலைவலிப் பிரச்னைகளைத் தவிர்க்கும்.

6.வயிற்றுப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

குறிப்பு:

1.பலமான விருந்துக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

2.வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, மக்னீசியம், ஃபோலேட் போன்ற சத்துகளைக்கொண்டது.

துளசி டீ

நன்மைகள்:

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

1. மன அழுத்தத்தைக் குறைக்கும்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

3. மூட்டுவலியைப் போக்கும்.

4. ரத்தச் சர்க்கரை அளவு, கொழுப்புச்சத்து அளவைச் சீராகவைத்திருக்க உதவும்.

குறிப்பு:

1. இரவு நேரத்தில் இந்த டீயைக் குடித்தால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

2. வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன.

3. மேற்கூறியவற்றில், எந்த வகை டீயையும் ஒரு நாளில் ஒரு தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம்.

“மூலிகை டீ வகைகளை எளியமுறையில் தயாரிப்பது எப்படி?’’ என்று சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் கேட்டோம்.

விக்ரம்குமார்

“நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுப் பொருள்கள் சிலவற்றின் மூலமாகவேகூட, மாற்று டீ வகைகளைத் தயாரிக்கலாம். அவற்றை `டீ’ என்று சொல்வதற்கு பதில், `கொதிநீர்’ என்று சொல்வது சரியாக இருக்கும்’ என்கிறார் விக்ரம்குமார். “டீ குடிக்க வேண்டும் என்று தோன்றும்போது கீழ்க்காணும் கொதிநீர் வகைகளை அருந்தலாம்’’ என்பவர், அவற்றை எப்படித் தயாரிப்பது என்பதையும் விளக்குகிறார்.

“கீழேயுள்ள கொதிநீருக்கான பொருள்களை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவைக்க வேண்டும். அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள்வரை கொதிக்கவைக்கலாம்.கொதிநீருடன் பால், சர்க்கரை சேர்க்கக் கூடாது. கொத்தமல்லி விதை, ஆவாரம் பூ போன்றவை கசப்புத் தன்மை நிறைந்தவை என்பதால் பனைவெல்லம் / பனங்கற்கண்டைச் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள், இனிப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆவாரம் பூ

1. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

2. உடலுக்கு உடனடி உற்சாகம் கிடைக்கும்.

3. ஆவாரம் பூவிலுள்ள ஃப்ளேவனாய்டு உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சலைச் சரிசெய்யும்.

குறிப்பு:

1.ஆவாரம் பூ மட்டுமன்றி, அதன் பட்டையையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

2.காலை நேரத்தில் இதை அருந்துவது நல்லது.

3.இயல்பாகவே ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் இயல்பு ஆவாரம் பூவுக்கு உண்டு என்பதால், லோ சுகர் பிரச்னை இருப்பவர்கள், உணவுக்குப் பிறகு இந்தக் கொதிநீரை அருந்துவது நல்லது.

கிரீன் டீ (Green Tea)

கிரீன் டீ

கிரீன் டீ

1. உடல் எடையைக் குறைக்க உதவும்.

2.சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

3. வளர்சிதை மாற்றங்களை அதிகப்படுத்தும்.

4. மன அமைதிக்கு வழிவகுக்கும்.

5. உடல் புத்துணர்ச்சிக்கு உதவும்.

6. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

குறிப்பு:

1.பகல் நேரத்தில் குடிக்கலாம்.

2. சாப்பிட்டதும் கிரீன் டீ குடிக்க வேண்டாம்.

3.கிரீன் டீ பேக் பயன்படுத்தாமல், அதன் இலைகளைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

கொத்தமல்லி விதை

ஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை?

1. பித்தப் பிரச்னைகளைக் குறைக்க உதவும்.

2. செரிமானத்தை எளிதாக்கும்.

3. உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும்.

4. சரும ஒவ்வாமைகளைத் தவிர்க்க உதவும்.

5. உடல் எடை குறைக்க உதவும்.

குறிப்பு:

1. காலை, மாலை இரு வேளையும் இந்த வகைக் கொதிநீரைக் குடிக்கலாம்.

சுக்கு, மல்லி

1. செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.

2. பித்தக் கோளாறுகளைத் தவிர்க்க உதவும்.

3. ஒற்றைத்தலைவலிக்குத் தற்காலிகத் தீர்வுதரும்.

4. கொத்தமல்லி, ரத்தக்குழாயில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

5. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குறிப்பு:

1. அல்சர் பிரச்னை இருப்பவர்கள் இந்த வகை கொதிநீரைத் தவிர்ப்பது நல்லது.

2. உடல் சார்ந்த பிரச்னை இல்லாதவர்கள் காலை, மாலை என இரு வேளையும் இதை அருந்தலாம்.

லவங்கப்பட்டை – வெந்தயம்

1. கொலஸ்ட்ரால் அளவைச் சீரான நிலைக்குக் கொண்டுவர உதவும்.

2. செரிமானப் பிரச்னைகலைத் தீர்க்கும்.

3. உணவுக்குப் பின்னர் அரை மணி நேரம் கழித்து இந்தக் கொதிநீரைக் குடித்துவந்தால், எதுக்களித்தல் பிரச்னை தீரும்.

குறிப்பு:

1. அல்சர் நோயாளிகள் இந்தக் கொதிநீரைத் தவிர்ப்பது நல்லது.

2. லவங்கப்பட்டையைப் பயன்படுத்தும்போது அளவில் கவனமாக இருக்க வேண்டும். பட்டை இரண்டு சிறிய துண்டுகள் போதும்.

3. நண்பகல் வேளையில் இதை அருந்துவது நல்லது.

சீரகம் அல்லது சோம்பு

1. செரிமானத்தை எளிதாக்கும்.

2.வாந்தியைத் தடுக்கும்.

3. தசைப்பிடிப்பு சரியாகும்.

4. பசியின்மை போக்கும்.

5. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

6. உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

7. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

8. மலச்சிக்கல் போக்கும்.

குறிப்பு:

1. காலை எழுந்ததும் இதைக் குடிப்பது நல்லது.

2. ஹெவியான உணவுகளைச் சாப்பிட்டு முடித்ததும் குடிக்கலாம்.

3. சிலர் சீரகத்தை ஊறவைத்துக் குடிப்பார்கள். ஆனால், நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. வெந்நீரில் கொதிக்கவைத்தால் மட்டும் நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்தலாம்.

அடிப்படையில், அஞ்சறைப்பெட்டிப் பொருள்கள் அனைத்துமே உடலுக்கு நன்மை பயப்பவை என்பதால் அவற்றைக் கொதிநீராக்கிக் குடிக்கலாம். வெட்டி வேர், விலாமிச்சை வேர், செம்பருத்தி இதழ் போன்ற மூலிகைகளையும் கொதிநீருக்குப் பயன்படுத்தலாம். மேற்கூறியவை கசப்புத் தன்மை நிறைந்தவை. இனிப்புச்சுவை வேண்டும் என நினைப்பவர்கள் கொதிநீரில் தேன், பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, இந்த வரைமுறை பொருந்தாது என்பதால், அவர்கள் மருத்துவரிடம் அறிவுரை பெறவும்” என்கிறார் விக்ரம்குமார்.

%d bloggers like this: