வியர்வையால் வேதனையா?

வியர்வையைத் தவிர்க்க சில ஆலோசனைகள்…

1. நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. காற்றோட்டமுள்ள இடங்களில் இருக்க வேண்டும்.

3. பருத்தி உடைகளையே அணிய வேண்டும்.

4. குடிக்கும் தண்ணீரில் நன்னாரி வேரைப் போட்டுவைத்து அருந்த வேண்டும்.

5. அதிக சூடான உணவுகளைத் தவிர்த்துவிட்டு, இளஞ்சூடான உணவுகளைச் சாப்பிடவும்.

6. காரம் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

7. பழச்சாறுகளை அருந்தலாம்.

8. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

9. மதுப்பழக்கம், புகைப்பழக்கம் தவிர்க்க வேண்டும்.

10. அதிக பித்தம் காரணமாகத்தான் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. இதைத் தவிர்க்க முதல் நாள் இரவு 20 கிராம் தனியாவை 200 மி.லி தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை வடிகட்டி, பல் துலக்கிய பின்னர் அருந்தலாம்.

11. நெல்லிக்காய் சூரணத்தை வெல்லம், பசு நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் பித்தம் தணிந்து வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும்.

12. இளம் தாமரைத்தண்டைப் பொடியாக நறுக்கி, சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து எலுமிச்சைப்பழச் சாறு தெளித்து அப்படியே சாப்பிடலாம்.

13. இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சார்ந்த உணவுகளுக்குப் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு என்பதால் அத்தகைய உணவுகளை உட்கொள்ளலாம்.

%d bloggers like this: