Daily Archives: ஜூலை 17th, 2019

கல்லீரல் காப்போம்!

கல்லீரல்

1.கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பால் இறக்கிறார்கள்.

2.எப்போதும் உடல்சோர்வாக இருப்பது, காய்ச்சல், தசை மற்றும் மூட்டுவலி போன்றவை கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள். வயிற்றுக் கோளாறு, மஞ்சள்காமாலை, சிறுநீர் நிறம் மாறுதல், பசியின்மை போன்றவையும்கூட கல்லீரல் அழற்சியின் அறிகுறிகளே.

Continue reading →

அ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்?

கார்ப்பரேட் கம்பெனிகள் கட்சிக்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதை இனி தமிழக அரசியல் களத்தில் காணப் போகிறீர்கள்!’’ என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். அவருக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்துவிட்டு, ‘‘கொஞ்சம் விவரமாகச் சொல்லும்’’ என்றோம்.

‘‘கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி-தான் இந்திய அரசியலில் கார்ப்பரேட் கலாசாரத்தை துவக்கிவைத்தது. அந்த ஃபார்முலா ஒர்க்-அவுட் ஆனதால், பல்வேறு மாநிலக் கட்சிகளும் கம்பெனி கலாசாரத்துக்குள் வந்துவிட்டன. அந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க-வும் இப்போது அதே பாணியை கையில் எடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்வி, கட்சித் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வலிமையான தலைவர் இல்லாத நிலையில், கட்சியை வலுப்படுத்த வேண்டிய நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரஷாந்த் கிஷோரை அ.தி.மு.க தரப்பு நெருங்கியுள்ளது.’’

Continue reading →

தொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா?!

தொலைநிலைக்கல்வியில் இரண்டு வகை உண்டு. ப்ளஸ் டூ முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லமுடியாமல் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்விமுறையில் சேர்ந்து படிப்பது; ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாமல் திறந்தநிலை கல்விமுறையில் நேரடியாகப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது.

குடும்பச்சூழல் காரணமாக தினமும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயில முடியாத மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது, தொலைநிலைக் கல்வி. ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லவியலாத மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டதாரிகளாகமுடியும். வேறு பணிகளைச்

Continue reading →

அத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…

காஞ்சி’ என்றால் ‘ஒட்டியாணம்’ என்று பொருள்.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம், பூமித்தாய் தன் இடையில் அணிந்திருக்கும் அணி என்கிறது தலவரலாறு. கோயில் நகரமென்று பேறுபெற்ற இந்நகரில் பார்க்கும் இடமெங்கும் பரமனின் ஆலயங்கள். நோக்கும் திசையெங்கும் திவ்ய தேசங்கள். பட்டுநெசவுக்குப் புகழ்பெற்ற இந்த நகரம், தற்போது திருவிழாக்கோலம் பூண்டு பளபளக்கிறது.

Continue reading →