கல்லீரல் காப்போம்!

கல்லீரல்

1.கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். கல்லீரல் புற்றுநோயால் இறப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பால் இறக்கிறார்கள்.

2.எப்போதும் உடல்சோர்வாக இருப்பது, காய்ச்சல், தசை மற்றும் மூட்டுவலி போன்றவை கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள். வயிற்றுக் கோளாறு, மஞ்சள்காமாலை, சிறுநீர் நிறம் மாறுதல், பசியின்மை போன்றவையும்கூட கல்லீரல் அழற்சியின் அறிகுறிகளே.

3. உலக அளவில் வருடத்துக்கு 14 லட்சம் பேர் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் தொற்று, உடல்நிலையை மிகவும் மோசமாக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் சரியாகிவிடும்.

4. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் அசுத்தமான நீர் மற்றும் உணவின் மூலம் பரவக்கூடியவை. இவை பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்குவதில்லை. ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ், ரத்தத்தின் மூலம் பரவுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை.

5. ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தாயின் மூலம் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர், நெயில் கட்டர், ஊசி போன்ற ஒருவர் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் பயன்படுத்துவதால் பரவுகிறது.

6. ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள… ஒருவர் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.

6. பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட வேண்டும்.

7. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

8.கல்லீரல் திசுக்கள் வீக்கமடைவதை, ‘கல்லீரல் அழற்சி’ என்கிறோம். உலகளவில் 38 கோடி பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் 4 ஆயிரம் பேர் இறக்கிறார்கள்.

9. கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களில், 95 சதவிகிதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது பற்றித் தெரிவதில்லை. வேறு ஏதாவது உடல் பரிசோதனைக்காகச் செல்லும்போதுதான் பாதிப்பு இருப்பதைத் தெரிந்துகொள்கிறார்கள்.

10. ஹெபடைட்டிஸ்… மிகவும் அபாயகரமான உயிர்க்கொல்லி வைரஸான இது ஏ, பி, சி, டி, ஈ என ஐந்துவிதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு ‘கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது.

11.ஒரு முறை ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதன் தாக்கம் உடலைவிட்டுச் செல்லாது. `2030-ம் ஆண்டுக்குள் இந்த வைரஸ் தொற்றை முழுமையாக அழிக்க வேண்டும்’ என்ற நோக்கத்துடன் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

%d bloggers like this: