Advertisements

சொந்த வீடு வாய்க்குமா?

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்’ என்பார்கள் பெரியோர்கள். சொந்த வீட்டின் அவசியத்தை உணர்த்தும் வாக்கியம் இது.

`சொந்த வீடு’ கனவுடன், ‘வாழ்நாள்ல எனக்கு சொந்தவீட்டில் வாழும் யோகம் உண்டா, இல்லையா’ என ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம்!

அவர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்குச் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா?

உங்கள் உள்ளங்கையைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்!

சொந்த வீடு வாய்க்குமா?

டத்தில் நிழலிட்டுக் காட்டப்பட்ட பகுதியை நன்றாகக் கவனியுங்கள். புதன் மேட்டுக்குக் கீழே இருதய ரேகையின் அடிவாரத்தில், சந்திர மேட்டுக்கு மேலே உள்ள பகுதிதான் பூமித்தாய் வாசம் செய்யும் செவ்வாய் மேடு. இந்த மேடு சிறு வளைவுகளோடு சற்று சதைப்பற்றுடன் பரந்துவிரிந்து காணப்படவேண்டும்.

செவ்வாய் மேட்டில் அதிகக் குறுக்குக் கோடுகள் இல்லாமல் நேர்த்தியாக அமைந்திருக்க வேண்டும். செவ்வாய்மேட்டில் செங்குத்து ரேகை காணப்படுவது கூடுதல் விசேஷம்!

புத்தி ரேகை நேராக செவ்வாய் மேட்டைத் தொட்டுக்கொண்டிருக்க, அந்த ரேகையின் மேல்நோக்குக் கிளை ஒன்று செவ்வாய் மேட்டில் காணப்பட்டால், அந்த நபரின் எண்ணமும் பேச்சும் பூமியைக் குறித்தே இருக்கும். இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் பூமித்தாயின் அருள்கடாட்சம் பெற்றவர்கள். இவர்களுக்கு வீடு, மனை அமைவதில் அதிகச் சிரமம் இருக்காது. பூமி, சொத்து சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பர். இவர்கள் அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதால், குறுகிய காலத்திலேயே மனை வாங்கி, சொந்த வீடு கட்டிவிடுவார்கள்.

ரேகை

ரேகை

சூரிய ரேகை, ஆயுள் ரேகையில் மேல்நோக்கு ரேகை காணத் தொடங்கும் வயது முதல், மேலும் மேலும் நிலங்கள் வாங்கி, பெரும் செல்வந்தராகிவிடுவார்கள்.

உங்கள் கையில் மேலே சொல்லப்பட்ட அமைப்புகள் இல்லாவிடினும் கவலைவேண்டாம்; உங்கள் வீட்டில் உங்களுக்கு நெருங்கிய எவரது கையில் மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், சொகுசான சொந்த வீடு அமையும் யோகம் நிச்சயம் உங்களுக்கு வாய்க்கும்!

முகூர்த்தங்கள் முப்பது!

ஒருமுகூர்த்த நேரம் என்பது இரண்டு நாழிகைகள், அதாவது 48 நிமிடங்களைக் கொண்டது. ஒரு நாளில் பகலில் 15; இரவில் 15 என முப்பது முகூர்த்தங்கள் உண்டு.

சொந்த வீடு வாய்க்குமா?

பகலில் வருவன…

ருத்ரா, அஹி, மித்ரா, பித்ரு, வசு, வார, விஷ்வேதேவா, விதி, சடமுகி, புருஹீதா, வாணி, நக்தன்சரா, வருணா, அரமா, பாகா.

இரவில் வருவன…

கிரிஸா, அஜிபாத, அஹிர்புத்யா, புஷா, அஸ்வி, எம, அக்னி, விதாத்ரு, சந்தா, அதிதி, ஜீவா, விஷ்ணு, யுமிகாத்யுதி, தியாஸ்துர், சம்தரம்.

Advertisements
%d bloggers like this: