Daily Archives: ஜூலை 21st, 2019

குடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது, கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைக் குடிக்கக் கூடாது… வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்று உங்களுக்குத் தோன்றலாம். சாதாரணமாகக் குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். இன்னும் சில பகுதிகளில் குழாய்த் தண்ணீரை நேரடியாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

Continue reading →

அமித் ஷாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்!’ – பரபரப்பில் அ.தி.மு.க.

துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உட்பட பி.ஜே.பி.யின் ஐந்து வேட்பாளர்களும் தோல்வியடைந்ததற்கு, அ.தி.மு.க. அமைச்சர்கள் சரியாக தேர்தல் வேலை பார்க்காதது தான் காரணம் என்று, மாநில பி.ஜே.பி. நிர்வாகிகள் சிலர் அமித் ஷாவின் பார்வைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், எந்த `ரெஸ்பான்ஸும்’ மேலிடத்தில் இருந்து இல்லை.

Continue reading →