ஆல் இஸ் வெல்!

ரபரப்பும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கைச்சூழலால் நம் இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது. உடல்நலக் கோளாறுகளோடு மனநலச் சிக்கல்களும் சேர்ந்து வாட்டத் தொடங்கிவிட்டன. உடல்நலப் பிரச்னைகளுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன.

ஆல் இஸ் வெல்!

ஆனால், மனநலச் சிக்கல்களுக்கு சிகிச்சைகள் குறைவு. காரணம், அவை குறித்த விழிப்புணர்வு இன்மை. மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வுதரும் சிகிச்சை முறைகளில் ஒன்று, ஆர்ட் தெரபி. மனதிலுள்ள எண்ணங்களை ஓவியமாக வரையச் சொல்வது, கோலம்போடச் சொல்வது… என பாதிக்கப்பட்டவர்களின் படைப்பாற்றல் மூலம் பிரச்னையின் தன்மையை உணர்ந்து சிகிச்சையளிப்பதே ஆர்ட் தெரபி.

ஆல் இஸ் வெல்!

“மனநலப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, எண்ணங்களில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கும். அதனாலேயே வாழ்வியலை பாதிக்கும் கவனச்சிதறல், ஒழுக்கமின்மை போன்ற சிக்கல்களை அதிகமாக எதிர்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான சிகிச்சைதான் ஆர்ட் தெரபி. ‘மனநல சிகிச்சையா?’ என நினைத்து, சிலர் இதற்குத் தயக்கம் காட்டுவதுண்டு.

ஹேமலதா
ஆர்ட் தெரபிஸ்ட்

அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மனநலத்தைப் பொறுத்தவரை பல நேரங்களில் மருந்து, மாத்திரைகள் முழுமையான பலனளிக்காமல் போகலாம். ஆனால், எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கு ஆரட் தெரபி உதவும்’’ என்கிறார் ஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதா. ஆர்ட் தெரபியின் பலன்கள் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.

ஆல் இஸ் வெல்!

“ `உணர்ச்சிகளை எந்தத் தடையும் இல்லாமல் வெளிப்படுத்தக்கூடியவர்தான் மகிழ்ச்சியானவர்’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது எல்லோருக்கும் எல்லா நேரமும் சாத்தியமாகாது. ‘கோபம் வரும்போது, அதை வெளிக்காட்டுவது நல்லதா அல்லது கட்டுப்படுத்திக்கொள்வது நல்லதா?’ என்று கேட்டால், சில நேரங்களில் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் நல்லது; இன்னும் சில நேரங்களில் முறையான வாதத்துடன் அதை அப்போதே வெளிப்படுத்திவிடுவதுதான் சிறந்தது. அதுவே மகிழ்ச்சியாக இருந்தால், அதை வெளிக்காட்டிவிடுவதோடு, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் சிறப்பு. சூழலைப் பொறுத்தே எந்த உணர்ச்சி வெளிப்பாடும் இருக்க வேண்டும். வெளிப்படுத்த முடியாமல், அடக்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த உணர்ச்சியை மனதிலிருந்து அணுக வேண்டும். அதற்கு ஆர்ட் தெரபி பயன்படும்.

ஆல் இஸ் வெல்!

மன அழுத்தம் உள்ளவர்கள், இழப்புகளிலிருந்து மீள முடியாமல் திணறுபவர்கள், மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்கள், வாழ்வில் பிடிமானம் இல்லாதவர்கள் என அனைவருக்குமே வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றிக்கொள்ள ஆர்ட் தெரபி பயன்படும். முறையான மனநல ஆலோசனைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மனநல மருத்துவரின் பரிந்துரையின்பேரில்தான் ஆர்ட் தெரபிஸ்டுகளை அணுக வேண்டும்.

ஆல் இஸ் வெல்!

இத்தகைய சூழலில் ஆர்ட் தெரபிஸ்டுகளை அணுகும்போது, சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். இந்தச் சிகிச்சைகள் அனைத்துமே, நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொரு முறையும் சிகிச்சை முடிந்ததும், ‘இப்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?’ என்று கேட்கப்படும். அவர் சொல்லும் பதிலைப் பொறுத்துதான், மேற்கொண்டு அவருக்கு எந்தச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம் என்பது தீர்மானிக்கப்படும். ஆர்ட் தெரபி ஒவ்வொருவருக்கும் மாறுபட்டாலும், அதற்கென பொதுவான சில வழிமுறைகள் உள்ளன.

ஆல் இஸ் வெல்!

 • ஆர்ட் தெரபி அளிக்கப்படும்போது, ‘இதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்களோ…’, ‘எனக்குப் படம் வரையத் தெரியாதே, என்ன செய்வது?’, ‘யாராவது கிண்டல் செய்தால் என்ன செய்வது?’ போன்ற எண்ணங்களைக் கைவிட வேண்டும்.

 • ஏதாவது ஒரு செயலைச் செய்யும்போது, ‘ஒன்றுக்கும் மேற்பட்டோர் இதைச் செய்யலாமே… அப்படிச் செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமே’ எனத் தோன்றினால், மற்றவர்கள் துணையுடன் சேர்ந்து செய்யுங்கள். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர், உங்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. எனவே, அந்த நபர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.

 • கிராஃப்ட் வொர்க் செய்யப் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும், மறுசுழற்சிக்காக நீங்கள் வைத்திருக்கும் பொருள்களாக இருப்பது நல்லது.

ஆல் இஸ் வெல்!

 • தெரபிஸ்ட் வழிகாட்டுதலின்பேரில் ஆர்ட் தெரபியை மேற்கொள்வது நல்லது. காரணம், ஒவ்வொரு செயலின் முடிவிலும், ‘இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும்போது எப்படி உணர்ந்தீர்கள்; இது உங்களுக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது; இதைச் செய்யும்போது உங்களுக்குத் தோன்றிய எண்ணங்கள் என்னென்ன?’ என்பதையெல்லாம் தெரபிஸ்ட் கேட்டறிவார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டால், உங்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்; வேறு சில பரிந்துரைகள் வழங்கப்படும். ‘இதை நானே செய்துகொள்வேன்’ எனச் சிலர் சொல்லலாம். ஆனால், தனிநபர் சுயமதிப்பீட்டுக்கும், தெரபிஸ்ட்டின் மதிப்பீட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தெரபிஸ்ட் மூலம் ஆர்ட் தெரபி மேற்கொள்பவர்கள் வேகமாகவும் விரைவாகவும் பிரச்னைகளிலிருந்து வெளியே வரலாம்.

ஆல் இஸ் வெல்!

சோகம், கோபம் ஏற்பட்டால் மீள என்ன செய்வது?

 • உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே வரையுங்கள்.

 • வாட்டர் கலரைப் பயன்படுத்திப் படம் வரையுங்கள். கவனச்சிதறல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தியானம் செய்யும்போது கவனத்தை ஒருங்கிணைக்க முடியவில்லையென்றால், இந்தப் பயிற்சியைக் கட்டாயம் பின்பற்றலாம்.

ஆல் இஸ் வெல்!

 • சோகம் மற்றும் வருத்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயக்கமாக இருந்தால், `பப்பட் தெரபி’ மேற்கொள்ளலாம். அதாவது, மனதுக்குப் பிடித்த வடிவத்தில் ஒரு பொம்மையை உருவாக்கி, அதனுடன் பேசுவது. வாய்ப்பிருந்தால் பொம்மைக்கென தனியாக குரலை உருவாக்கிக்கொண்டு, அதனுடன் பேசலாம். பொம்மைதான் உங்களின் மனசாட்சி என்று நினைத்துக்கொண்டு, அதனுடன் பேசுங்கள். அப்படிப் பேசுவதன் மூலம் உங்கள் பிரச்னைக்கான தீர்வுகளைக் கண்டறியலாம்.

 • லைன் ஆர்ட், அதாவது நேர்க்கோடுகள் மற்றும் சிறு சிறு வளைவுகளை அதிகமாகக்கொண்ட படங்களை வரைந்து பாருங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • கோபம் அல்லது வருத்தத்துக்குக் காரணமான நபர்களுக்கு எழுதுவதுபோல போஸ்ட் கார்டு ஒன்றைத் தயார் செய்யுங்கள். அதை போஸ்ட் செய்ய வேண்டாம். எழுதி நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

 • க்ளே உதவியுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும் வகையில் சின்னச் சின்ன பொம்மைகள் செய்யத் தொடங்குங்கள். அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள், உங்களுக்கு நெருக்கமான உறவினர் என அனைவரையும் பொம்மைகளாக வடிவமைத்துப் பாருங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்குகளை அதிகமாகக்கொண்ட படங்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அவற்றை வரையுங்கள்.

 • உங்கள் மன ஓட்டத்தைப் படமாகவோ, எழுத்தாகவோ உருவாக்கி, அதை பலூனில் கட்டிப் பறக்கவிடுங்கள்.

 • இதயத்தின் வடிவத்தை வரைந்து, அதனுள்ளே உங்கள் எண்ணங்களை நிறங்களின் தொகுப்பாக வெளிப்படுத்துங்கள். வரையத் தொடங்குவதற்கு முன்னரே, ‘இந்த உணர்வுக்கு இந்த நிறம்’ என முடிவுசெய்துகொண்டு வரைவது நல்லது.

ஆல் இஸ் வெல்!

மன அமைதிக்கு என்ன செய்யலாம்?

 • பாடல் கேட்டபடி, அதன் இசைக்கேற்ப ஏற்ற இறக்கங்களுடன் கூடிய படம் ஒன்றை வரையுங்கள். உங்களால் எத்தனை வண்ணங்களைப் பயன்படுத்த முடிகிறதோ, அவை அனைத்தையும் இந்தப் பயிற்சிக்குப் பயன்படுத்துங்கள்.

 • மனதில் தோன்றுவதை அப்படியே அப்பட்டமாகப் படத்தில் வரைய முயலுங்கள். கோடுகள், நிறங்கள் என எதற்கும் தடை போடாமல் பிடித்த நிறத்தில், பிடித்த கோணத்தில் வரையுங்கள். எவ்வளவு கிறுக்கலாக இருந்தாலும் சரி, கூச்சப்படாமல் வரைந்து முடியுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • கை விரல்களில் நிறங்களை அப்பிக்கொண்டு படங்கள் வரையலாம். இந்தப் பயிற்சியை, இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்வது அதிக பலன் தரும்.

 • சின்னச் சின்ன டிசைன்களை, குறுகலான இடைவெளியில் தொடர்ச்சியாக வரைந்து பாருங்கள். இந்தப் பயிற்சி முறை, `மண்டலா ஆர்ட்’ (Mandala Art) எனப்படும்.

 • கண்களை மூடிக்கொண்டு படம் வரைந்து பாருங்கள். இது நகைச்சுவைக்காகச் செய்யப்படும் பயிற்சி என்றாலும், பலன் கிடைக்கும்.

ஆல் இஸ் வெல்!

 • முறையான திட்டமிடுதலுக்குப் பிறகு, அளவில் மிகப்பெரிய படத்தை வரையவும். இப்படி வரைவதால், உடலின் அத்தனை தசைகளும் அசையும். திட்டமிடுதலில் தொடங்கி, படம் முடியும்வரை கவனம் கூர்மையாக இருக்கும் என்பதால், வரைந்து முடித்ததும் மன அமைதி கிடைக்கும்.

 • சிறு சிறு பிளாக்ஸ் (க்யூப் பாக்ஸில் உள்ள கட்டைகள்போல) எடுத்துக்கொண்டு, அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிறத்தை அடியுங்கள். நிறைய பிளாக்ஸைப் பயன்படுத்தினால், நிறைய நிறங்கள் கொடுக்க முடியும். எனவே, அதிக எண்ணிக்கையில் பிளாக்ஸ் இருக்கட்டும்.

 • எந்த நிறத்தைப் பார்த்தால், நீங்கள் அமைதியாக உணர்கிறீர்களோ அந்த வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • மணல் ஓவியம் வரைந்து பழகுங்கள்.

 • சிறு சிறு வடிவத்தையும், 3டி அனிமேஷன் பாணியில் வரைந்து பழகுங்கள். இது ‘ஸென்டேங்கில்’ (Zentangle) எனப்படும்.

 • ஏற்கெனவே வரைந்த ஏதேனும் ஒரு டிசைனை எடுத்துக்கொண்டு, அதற்கு கலர் கொடுக்கவும்.

 • காகிதம் எதுவுமில்லாமல், காற்றில் கைவீசி வெற்று ஓவியத்தை வரையுங்கள்.

ஆல் இஸ் வெல்!

புத்துணர்ச்சி வேண்டுமா… இவற்றையெல்லாம் செய்யவும்!

 • மனதுக்குப் பிடித்த விஷயங்களைப் புகைப்படமாக எடுங்கள்.

 • மனதில் தோன்றும் வார்த்தைகளைப் பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அழகான ஃபான்ட்டுகளால் காகிதத்தில் எழுதுங்கள். உங்களுக்குப் பிடித்த கவிதை வரிகளை இப்படி எழுத முயலலாம்.

 • சுதந்திரத்தையும் மன அமைதியையும் வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மாதிரியாக வைத்துக்கொண்டு சிறு சிறு மாற்றங்களைச் செய்து வரையுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஓர் அமானுஷ்யமான விஷயத்தை, படமாக வரையுங்கள். தத்ரூபமாக வரைய வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் இல்லை. பிடித்த கோணத்தில் வரையுங்கள். உங்களுக்குப் புரிந்தால் போதுமானது.

 • மிகவும் மிருதுவான, அழகான சருமம்கொண்ட விலங்கு ஒன்றை வரையுங்கள்.

 • மிருதுவாக உள்ள பொருள்களை வைத்துக்கொண்டு, புதிய பொருள் ஒன்றை உருவாக்குங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • உங்கள் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், வீட்டில் எந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டும், எத்தனை அறைகள் இருக்க வேண்டும், அவை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது, கார்ட்போர்டு உதவியுடன் சிறிய அளவில் அறை ஒன்றைத் தயார் செய்துகொள்ளுங்கள். அறையின் உள்ளே என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பொம்மையாக வாங்கி அதனுள்ளே வைத்து அழகான மாதிரி அறையைத் தயார் செய்யுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • உங்களுக்கு பயத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வையும், அதிலிருந்து நீங்கள் மீண்டுவந்தது பற்றியும் யாரிடமாவது நகைச்சுவையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 • இதுவரை உங்களுக்குப் புரியாத புதிராக இருந்த ஏதாவது ஒரு கேள்விக்கு விடை தேட முயலுங்கள்.

 • உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். கடவுளிடம் என்றில்லை, இயற்கையிடம்கூட உங்களின் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

ஆல் இஸ் வெல்!

உங்களை நீங்களே புரிந்துகொள்ள வேண்டுமா… இதைச் செய்யுங்கள்!

 • உங்கள் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைப் படங்களாக வரையுங்கள். அவற்றைத் தொகுப்பாக்கி, போர்ட்ரெய்ட் வடிவத்தில் ஒரே நீளத்தில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.

 • டிசைன் ஏதுமில்லாத துணிப்பையை எடுத்துக்கொண்டு, அதன் வெளிப்பகுதியில் உங்கள் மனதுக்குப் பிடித்த இதமான விஷயங்களை வரையுங்கள். வெளிப்பகுதி காய்ந்தவுடன், மனதில் தோன்றும் மற்றொரு விஷயத்தை உள்பகுதியில் வரையுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • உங்களுக்கு மிகவும் பிடித்த மனிதர்கள் யார் யாரென்று குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாகப் படங்கள் வரைந்து அவற்றைப் பரிசளியுங்கள்.

 • உங்களைப் பற்றி நீங்களே ஒரு சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட கேலிச்சித்திர/சினிமா கதாபாத்திரமாக உங்களை உருவகப்படுத்திக்கொள்ளுங்கள். என்ன உருவம் தோன்றுகிறதோ, அதைப் படமாக வரையுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • யாராவது ஒரு நபரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவருடைய முழு நீளப் படத்தை வரையுங்கள்.

 • கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, உங்களை நீங்களே படமாக வரையுங்கள். அதாவது நீங்களே மாடல், நீங்களே ஓவியர்.

 • உங்களுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ கேரக்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதை வரையுங்கள். இல்லையென்றால், எந்த கேரக்டர் இந்த நொடி உங்களுடன் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, அந்த கேரக்டரை வரையுங்கள். அப்படி வரையும்போது, அதன் முகத்தில் உங்கள் முகத்தை வரையுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • உங்களிடமிருக்கும் நல்ல குணங்களையும், நீங்களே உங்களை உயர்வாக நினைக்கும் தருணங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படம் வரையுங்கள். படமாக வரைய வாய்ப்பு இல்லாதவர்கள், புகைப்படம் எடுத்து, கொலாஜ் செய்து தொகுத்துக்கொள்ளலாம்.

ஆல் இஸ் வெல்!

இழப்புகளிலிருந்து மீள…!

 • எந்த இடத்தில், யாருடன் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள் என்பதை யோசித்துப் பார்த்து, அதை வரையத் தொடங்குங்கள்.

 • உங்கள் அறைக்கு, இன்டீரியர் டிசைனிங்

(Interior Designing) செய்யத் தொடங்குங்கள். ஏதாவதொரு ‘தீம்’ உருவாக்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் டிசைன் செய்யுங்கள். அதற்கான சூழல் அமையாதவர்கள், ‘மாதிரி அறை’யை, கார்ட்போர்டு மூலம் தயாரித்துக்கொள்ளுங்கள். அதனுள்ளே உங்களது டிசைனிங் திறமையை வெளிப்படுத்துங்கள். பொருள்களைச் சிறு சிறு பொம்மைகளாகப் பெற்றுக்கொள்வது நல்லது. பொருள்கள் கிடைக்கவில்லையென்றால், பேப்பரில் வரையலாம் அல்லது அட்டை மூலம் அவற்றை உருவாக்கலாம்.

ஆல் இஸ் வெல்!

 • உங்களுக்கு மிகவும் பயத்தை உண்டாக்கும் விஷயத்தை ஓவியமாக வரையலாம்.

 • மணல் ஓவியம் வரைவது, கோலம் போடுவதுபோல குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் ஏதேனும் ஒரு கலையைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யத் தொடங்குங்கள்.

 • மனதுக்கு மிகவும் நெருக்கமான நபரை இழந்துவிட்டீர்களா… ஒரு நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், நீங்கள் இழந்த நபரைப் பற்றிய குறிப்புகள், சம்பவங்கள் என அனைத்தையும் படங்களாக வரையுங்கள்.

ஆல் இஸ் வெல்!

 • தன்னம்பிக்கை தரும் படங்கள், வரிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி கொலாஜ் தயார் செய்யவும். நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவும்.

 • இரண்டு முகமூடிகளைத் தயார்செய்யுங்கள். ஒன்று, உங்களின் நிஜ முகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். மற்றொன்று, உலகம் உங்களுக்குக் கொடுத்ததாக இருக்க வேண்டும்.

ஆல் இஸ் வெல்!

நன்றியுணர்வை வெளிப்படுத்த இவற்றைச் செய்யலாம்!

 • வாழ்வில் உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைப் படமாக வரைந்துகொள்ளுங்கள். படம் வரையத் தெரியாது என்றால், நிகழ்வுகளைப் புகைப்படங்களாகத் தொகுத்து கொலாஜ் செய்துகொள்ளலாம்.

 • மரம் வடிவில் படம் வரைந்து, அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படங்களாகப் பட்டியலிடுங்கள் (ஃபேமிலி ட்ரீ – Family Tree).

 • நீங்கள் மிகவும் ரசித்த ஏதேனும் ஒரு விஷயத்தை, நெருங்கிய ஒருவருக்குப் பரிசளிக்கலாம்.

 • உங்கள் வாழ்க்கையில், உங்களுக்குக் கிடைத்த/நீங்கள் பெற்ற நல்ல விஷயத்தைப் படமாக வரையுங்கள்.

 • சிறு சிறு கற்களுக்கு, கலர் அடித்து அவற்றை அலங்கரியுங்கள்.

ஆல் இஸ் வெல்!

கிரியேட்டிவிட்டியை அதிகப்படுத்தும் வழிமுறைகள்!

 படுக்கையிலிருந்து எழுந்ததும், கனவில் உங்களுக்குத் தெரியும் விஷயங்களைத் தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் படங்களாக வரையுங்கள்.

 ஏதேனும் ஒரு விலங்காக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், எந்த விலங்காக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் படமாக வரையுங்கள்.

 உங்கள் வாழ்க்கையில் நடந்தவை, நடக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பவற்றைத் தொகுத்து எழுதி, அதைவைத்து லைஃப் மேப் உருவாக்குங்கள்.

ஆல் இஸ் வெல்!

 மனதில் தோன்றுவதைத் தொகுத்து வைத்துக்கொண்டு, அதற்கு ஒரு நிறமும் வடிவமும் கொடுங்கள்.

 கனவில் தோன்றும் விஷயங்களை எழுதிக்கொண்டு, அவற்றை அப்படியே வரையுங்கள்.

 ஜன்னல்களுக்கு நிறம் கொடுங்கள்.

 பழைய புகைப்படங்களை எடுத்து, அவற்றை வைத்து கொலாஜ் செய்யுங்கள்.

 முடிந்தவரை இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாக இலைகள், க்ளே வகைகள், குச்சிகள், பழைய துணி வகைகளைப் பயன்படுத்துங்கள்.

ஆல் இஸ் வெல்!

 படம் வரைவதற்கு, பெயின்ட் பிரஷ்ஷை உபயோகிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இலைகள், துணிகள், காகிதங்கள் என எந்தச் சாதனத்தை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். உங்களால் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்கிற ஏதேனுமொரு பொருளை, பிரஷ்ஷாக மாற்றிப் பயன்படுத்துங்கள்.

 உங்கள் வீட்டில் கண்ணாடி, கதவுகள், ஜன்னல்கள் இருக்குமென்றால் க்ரேயான்ஸ் (Crayons) மூலம் அவற்றுக்கு வண்ணம் கொடுங்கள்.

 உடலில் கைகால் போன்ற ஏதேனும் ஓர் உடலுறுப்பைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதிக்கு வண்ணம் தீட்டுங்கள்.’’

ஆல் இஸ் வெல்!

பூங்கொடி, மனநல மருத்துவர்

`ஒவ்வொரு நாளும், படுக்கைக்குச் செல்லும் முன் ‘இந்த நாள் நமக்கு எப்படி இருந்தது’ என்பதை யோசித்து, நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்வது ஆரோக்கியமான செயல்’ என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் இது சாத்தியப்படுவதில்லை. ‘அதற்கெல்லாம் நேரம் இல்லைப்பா’, ‘யோசித்துப் பார்ப்பதால் மட்டும் என்னவாகிவிடப் போகிறது…

ஆல் இஸ் வெல்!

மீண்டும் அதே வாழ்க்கையைத்தானே வாழ வேண்டும்!’ போன்ற எண்ணங்களே நம்மில் பலருக்கும் உள்ளன. தொடர்ச்சியாக இத்தகைய மனநிலையில் இருப்பவர்கள், ஒருகட்டத்துக்குமேல் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். `இவர்களுக்குக்கூட ஆர்ட் தெரபி பயன்படுமா?’ மனநல மருத்துவர் பூங்கொடியிடம் கேட்டோம்.

ஆல் இஸ் வெல்!

“எந்தவொரு கலை வடிவமும், ஒருவரைச் சிக்கலிலிருந்து மீட்கக்கூடியதுதான். ஆனாலும், தீவிர அழுத்தத்துடன் இருப்பவர்கள், சுயமாக எதையும் செய்ய வேண்டாம். சுயமாகச் செய்யும்போது ஓர் ஒழுங்கு இல்லாமல் போய்விடும். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் புரிந்துணர்வோ, தெளிவோ இல்லாமல் செய்ய நேரிடும். எனவே, முறையான நிபுணரின் பரிந்துரையுடன் செய்வதுதான் நல்லது.

ஆல் இஸ் வெல்!

எத்தகைய சூழலில் தெரபிஸ்ட் பரிந்துரைக்கப்படுவார்கள்?

மனநலம் சார்ந்த சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவரை அணுகுகிறார் என்றால், அவர் அந்தப் பிரச்னையிலிருந்து வெளியேவர நினைக்கிறார் என்று அர்த்தம். ஆனாலும்கூட, சிலருக்கு சில மனத்தடைகள் இருக்கத்தான் செய்யும். அவர்களால் அதைவிட்டு வெளியே வர முடியாது. அப்படியானவர்களை இயல்பாக்குவதற்கும், அவர்களது பிரச்னையை அவர்களாகவே பேசவைப்பதற்கும் தெரபிஸ்ட் உபயோகப்படுவர். ஆக, தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தத் தயங்கும் நோயாளிகளுக்குத்தான் தெரபிஸ்ட் பரிந்துரைக்கப்படுவர்” என்கிறார் அவர்.

%d bloggers like this: