உட்காரும்போது நரம்பு சுள்ளுனு குத்துதா? இதுதான் காரணம்… இப்படி செய்ங்க சரியாயிடும்…

பைரிஃபார்மிஸ் என்ற இந்த பிரச்சினை பைரிஃபார்மிஸ் எனப்படும் சிறிய தசை மூலம் சியாட்டிக் நரம்பை சுருக்கும்போது ஏற்படுகிறது. இந்த அழுத்தம் பைரிஃபார்மிஸ் என்ற தசைகளில் பிடிப்பை உண்டாக்குகிறது. இந்த தசை நமது பிட்டப் பகுதியில் அமைந்துள்ளது.

Piriformis Syndrome

குளுட்டியஸ் மாக்சிமஸின் (இடுப்பின் முக்கிய எக்ஸ்டென்சர் தசை) சியாக்டிக் நரம்பு வரை நீண்டு தொடை எலும்பின் மேல் வரை அமைந்துள்ளது. இதனால் நாம் உட்காரும் போது நமது பிட்டப் பகுதியில் வலி ஏற்படுகிறது. இந்த வலி சியாட்டிகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பைரிஃபார்மிஸ் தசைகள்

இந்த தசைகள் இடுப்பெலும்புகளின் அசைவிற்கு உதவுவதோடு தொடைகளை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நகர்த்த உதவுகிறது. நடக்கும் போது கால்களை சமநிலைப்படுத்தி நடக்க உதவுகிறது. அதே மாதிரி விளையாட்டு வீரர்கள் விளையாட்டின் போது தொடைகளை தொடர்ச்சியாக சுழற்றவும் நகர்த்தவும் பயன்படுகிறது.

காரணங்கள்

இந்த நோய்க்குறியால் அந்த தசைகளில் வலி ஏற்படுகிறது. இது சில காரணங்களால் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அதீத உடற்பயிற்சி

கால்களுக்கான அதீத உடற்பயிற்சிகள் :திரும்ப திரும்ப ஓடுதல், நீட்டுதல்

கனமான பொருட்களை தூக்குதல்

மாடி படிக்கட்டுகளில் ஏறுதல்

வாழ்க்கை முறை

தசைகளில் அழுத்தம் மற்றும் கருவுற்றதால் ஏற்படும் அதீத உடல் எடை

சில விபத்துகள்

திடீரென இடுப்பை திருப்புதல்

திடீரென விழுதல்

கார் விபத்துகள்

காயங்களின் ஆழம் தசைகள் வரை தாக்குதல்.

 

அறிகுறிகள்

உட்காரும் போது பிட்டத்தில் திடீரென சுருக்சுருக்கென்று வலி ஏற்படும்.

பிட்டத்தில் வலி

பிட்டத்தில் உணர்வில்லாமல் போதல்

நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும் போது வலி உண்டாதல்

வலி அதிகரித்து பிட்டத்தில் இருந்து கால்கள் வரை செல்லுதல்

தற்போதைய காலத்தில் நாம் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே கணிணி முன்னாடி வேலை பார்ப்பது, பல மணி நேரம் கார் ஓட்டுவது, வீட்டு வேலைகள் இந்த மாதிரியான வேலைகளால் கூட இந்த வலி உண்டாகலாம்.

 

அபாயம்

நீங்கள் நீண்ட நேரம் கணிணி முன்னாடியோ அல்லது டீவி முன்னாடியோ உட்கார்ந்து இருந்தால் இந்த நோய்க்குறி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி அதீத கால் உடற்பயிற்சி போன்றவை கூட இந்த பிரச்சனையை உண்டு பண்ணும்.

கண்டறிதல்

பிட்டத்தில் வலி சில வாரங்களாக தொடர்ந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. அவர் தரும் மருத்துவ சிகிச்சை உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

உங்களிடம் மருத்துவர் வலிக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை கொடுப்பார். தேவைப்பட்டால் எம். ஆர். ஐ ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் பரிந்துரை செய்வார். இடுப்பு மற்றும் கால்களுக்கு சில அசைவுகள் கொடுப்பார். அதே மாதிரி அல்ட்ரா சவுண்ட் மூலம் தசைகளின் நிலையையும் அறிந்து அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிப்பார்.

ஐஸ் பேக் ஒத்தடம்

உடனே வலியை குறைக்க ஐஸ் கட்டிகள் மற்றும் சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

ஒரு துணியில் ஐஸ் கட்டிகளைக் எடுத்துக் கொண்டு 15-20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள். இதே மாதிரி சுடு நீர் ஒத்தடமும் மேற்கொள்ளுங்கள். சில மணி நேரம் செய்யும் போது வலி போய்விடும்.

அதே மாதிரி அதீத உடற்பயிற்சிகள் மற்றும் அசைவுகளை கொஞ்ச நாள் தவிர்த்து வாருங்கள்.

வலி நிவாரணிகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், தசைகள் ரிலாக்ஸ் மருந்துகள், ஊசிகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது

பாதுகாப்பான உடற்பயிற்சிகள் இந்த மாதிரியான சியாடிக் நரம்பு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த உடற்பயிற்சியை நீங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம். தரையில் முதலில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடது காலை தூக்கி வலது முழங்காலுக்கு எதிராக வைக்கவும். இப்பொழுது வலது முழங்காலை உங்கள் மார்பை நோக்கி சில 5 விநாடிகள் பிடித்து கொள்ளுங்கள். இப்பொழுது காலை பழைய நிலைக்கு கொண்டு வந்து இன்னொரு காலுக்கு செய்யவும். இதை 30 நிமிடங்கள் செய்து வாருங்கள். 3-5 தடவை இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

தடுக்கும் வழிகள்

உடற்பயிற்சி செய்வதற்கு முன் கொஞ்சம் வார்ம் அப், கால் நீட்சிகளை செய்து கொள்ளுங்கள்.

மெது மெதுவாக உடற்பயிற்சியின் தீவிரத்தை கூட்டுங்கள்

ஒழுங்கற்ற தரையில் ஓடுவது அல்லது உடற்பயிற்சி செய்வதை விடுங்கள்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவது போன்ற வேலைகளை செய்யாதீர்கள்.

சியாடிக் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இந்த வலி ஒரு பெரிய பிரச்சினை கிடையாது. உங்களுடைய வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் இவற்றை மாற்றினால் மட்டுமே போதும். இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை பெறலாம்.

%d bloggers like this: