நீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா…? – உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்!

வீட்டில் நாய், பூனை, மீன்கள் போன்ற தங்களுக்குப் பிடித்தமான செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு மனஅழுத்தம் குறைந்து பாசிட்டிவ் எண்ணங்கள் வளரும்’ என்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூனை

பூனை

இன்றைய கணினி யுகத்தில், பலரது வாழ்க்கையில் மன அழுத்தம் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. அதனால், மன அழுத்தத்தை கட்டுக்குள்வைக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியிருக்கிறது.

இந்நிலையில், `செல்லப்பிராணிகள் வளர்ப்பது மனஅழுத்தம் போக்க உதவுமா…’ என்பதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகத்தின் மனித மேம்பாட்டுத்துறையின் இணை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான பாட்ரிசியா பெண்ரி (Patricia Pendry), அதே துறையின் மற்றொரு பேராசிரியர் ஜெய்மி எல்.வாண்டக்ரிஃப் (Jaymie L. Vandagriff) ஆகியோர் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

செல்லப்பிராணி

செல்லப்பிராணி

அந்த ஆய்வில், 249 உடலியல்துறை கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில், அவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தனர். அதையடுத்து, முதல் குழுவை 10 நிமிடங்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாட அனுமதித்தனர். இரண்டாவது குழுவினரை முதல் குழுவினர், செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதைப் பார்த்து ரசிக்க வைத்தனர். மூன்றாவது குழுவினரை செல்லப்பிராணிகளின் ஸ்லைடு காட்சிகளைப் பார்வையிடச் செய்தனர். நான்காவது குழுவினரை அமைதியாக ஓர் இடத்தில் அமரவைத்தனர்.

முடிவில், நான்கு குழுக்களைச் சேர்ந்தவர்களின் உமிழ்நீரில் (சலைவா பரிசோதனை) கார்டிசோல் அளவைப் பரிசோதித்தனர். ஒருவரின் மன அழுத்தத்தை, உடலில் சுரக்கும் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோனைவைத்து அளவிடலாம். அதாவது, உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது மன அழுத்தமும் அதிகரிக்கும். ஆய்வின் முடிவில் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிட்டவர்களிடம் கார்டிசோல் ஹார்மோனின் அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, அமெரிக்க கல்வி ஆராய்ச்சி சங்கத்தின் (American Educational Research Association) ஏரா ஓப்பன் (AERA Open) இதழில் வெளியாகியிருக்கிறது.

நாய்க்குட்டி

நாய்க்குட்டி

ஆகவே, உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணிகளை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்கி, மன அழுத்தத்தைக் குறையுங்கள்.

%d bloggers like this: