Daily Archives: ஜூலை 24th, 2019

வாரத்திற்கு, 400 கலோரிகள்!

மரபியல் காரணங்களால், அடி வயிற்றுப் பகுதியில், கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன் ஏற்படுகிறது. கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம் சாப்பிடும் போது, இன்சுலின் அளவு அதிகரித்து, ரத்த சர்க்கரையின் அளவு உயருகிறது; கல்லீரலில் கொழுப்பு சேருகிறது.

Continue reading →

பெரும் மாற்றம் காணவிருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் – வாகன ஓட்டிகள் கவனத்துக்கு!

2019-ம் ஆண்டுக்கான மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் லோக்சபாவில் நீண்டநேர விவாதங்களுக்குப் பிறகு, ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டு, 16-வது லோக்சபா நிறைவுபெற்றபோது தகுதி இழந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீண்டும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா ராஜ்யசபாவில் இந்த முறை நிறைவேறும்பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவிருக்கிறது.

Continue reading →

மிஸ்டர் கழுகு: திராவிட முன்னேற்ற கம்பெனி

லேசான தூறல் மழையில் நனைந்து வந்திருந்த கழுகாருக்கு இஞ்சி டீ கொடுத்து உபசரித்தோம். உற்சாகமான அவர் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்…

‘‘சத்தமின்றி முடிந்துவிட்டது, சட்டமன்றக் கூட்டத்தொடர். இப்போது எல்லோர் கவனமும் நாடாளுமன்றம் பக்கம் போய்விட்டது. அங்கே உடன்பிறப்பு உறுப்பினர்களுக்குள் உரசல் ஆரம்பமாகிவிட்டது.’’

‘‘விவரமாகச் சொல்லும்?’’

‘‘தி.மு.க சின்னத்தில் வென்றவர்கள் 22 பேர். இதில் பலர் சீனியர்கள். இவர்களில் சீனியர் மோஸ்ட் என்கிற முறையில் டி.ஆர்.பாலுவுக்கு தி.மு.க நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போதே கனிமொழி தரப்பில் முணுமுணுப்பு கிளம்பியதாம். தலைமை அதைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டதாம். அந்த முணுமுணுப்பு, இப்போது புகைச்சலாக நிலைகொண்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் அங்கம் வகிப்பது யார் என்பதிலும் தி.மு.க உறுப்பினர்களிடையே யுத்தம் துவங்கிவிட்டது.’’

Continue reading →

சைலன்ட் அட்டாக்’ ஏன் வருகிறது தெரியுமா…!

சைலன்ட் அட்டாக்’ என்று சொல்கின்றனரே? அப்படியென்றால் என்ன. இப்பாதிப்பு வர என்ன காரணம்?
நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்பு ஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்’ என்பர். வயது முதிர்ந்தவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

Continue reading →