பேலியோ டயட் முறையில் உள்ள நன்மை, தீமை என்ன?

பேலியோ உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் கொழுப்பு படிமங்கள் இதய குழாயில் படிவதாகவும், இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படலாம் என கூறுகிறது.


பேலியோ டயட் முறையில் உள்ள நன்மை, தீமை என்ன?
கொழுப்பை கரைக்க கொழுப்பை சாப்பிடும் உணவு முறையான பேலியோ டயட் முறையில் உள்ள நன்மை, தீமை என்ன? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகே பேலியோ பயனாளிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, மதுரையை சேர்ந்த பேலியோ பயனாளிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்கள் தாங்கள் கடைபிடிக்கும் பேலியோ உணவு முறை தொடர்பாகவும், அதனால் கிடைத்த பலன்களையும் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் இது தொடர்பாக கேட்ட போது, நாம் அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் உணவு வகைகளில் உள்ள தேவையற்ற குளுகோஸ், கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. இதனால் பல நோய்கள் ஏற்படுத்துகிறது என்று வலியுறுத்தி இதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட உணவு முறையே பேலியோ என்கின்றனர்.

இந்த உணவு முறை குறித்து மருத்துவர்கள் கூறும் போது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அதிக அளவில் காணப்படும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் எனப்படும் பிரச்னை அதிகரித்து காணப்படுவதாகவும், அதற்கு பேலியோ சிறந்த தீர்வாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், யுரோப்பியன் ஜெனரல் ஆஃப் நியுட்ரிஷியன் என்ற மருத்துவ குழு, பேலியோ உணவு முறையை கடைபிடிக்கும் 44 பேரிடம் நடத்திய சோதனையில், இதய நோயினை ஏற்படுத்தும் டி.எம்.ஏ.ஓ அதிக அளவில் சுரப்பதாக கண்டறிந்துள்ளது. அதாவது பேலியோ உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் கொழுப்பு படிமங்கள் இதய குழாயில் படிவதாகவும், இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படலாம் என கூறுகிறது.

%d bloggers like this: