Daily Archives: ஓகஸ்ட் 1st, 2019

ருசித்துப் புசி!

நம்மில் எத்தனை பேருக்கு சாப்பிட தெரியும்? இதென்ன கேள்வி? யாருக்காவது சாப்பிடத் தெரியாமல் இருக்குமா? என்று நினைக்க வேண்டாம். என்ன சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று அதிகமாக பேசப்பட்டு வரும் சூழலில், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியாமல்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய தேதியில், காலையில் அலுவலகம் / பள்ளி கிளம்புபவர்கள் ஒருவராவது நிதானமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோமா? நகரங்களில் வாழும் சிலர் போகும் வழியில் ரயிலிலும், பஸ்ஸிலும் உணவை அள்ளித் திணித்துக் கொள்ளும் காட்சிகளையும் நாம் தினசரி பார்த்து பழகி இருப்போம்.
போதாதற்கு தெருவோர வண்டிக்கடைகளாகட்டும் அல்லது மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகளிலும் பஃபே சிஸ்டம் என்ற பெயரில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. எதிரில் இருப்பவருடனோ அல்லது போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது என நாம் இவ்வாறு உணவு உண்ணும் விஷயத்தில் பல தவறுகளை செய்கிறோம்.

Continue reading →

தண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்

நீர் நம் உயிர்!

வாட்டர் மீட்டர்
வாட்டர் மீட்டர்

மிழகத்தின் பல பகுதிகளில் விவாதத்துக்குரிய தலைப்பாக மாறிப் போயிருக்கிறது, தண்ணீர்த் தட்டுப்பாடு. தேவையான அளவு தண்ணீரைச் சேமிக்காதது, இருக்கிற தண்ணீரைத் தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தாதது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், இந்த ஆண்டு தண்ணீர்ப் பஞ்சத்தின் தாக்கம் வழக்கத்தைவிட மிக அதிகமாகவே இருக்கிறது. தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்குத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசின் கடமையே. இருப்பினும்,

Continue reading →

இரண்டே நாளில் 1,500 புதிய கணக்குகள்!” – ரூ. 15 லட்சம் வதந்தியால் திணறிய மூணாறு தபால் நிலையம்

வாட்ஸ்அப் செய்தி வதந்தி எனக் கூறியும் தபால் நிலையத்தில் மக்கள் புதிய கணக்கு தொடங்கிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்திவருகின்றனர். அதன்மூலம் பல நல்ல விசயங்கள் பகிரப்படுகின்றன. அதைவிட அதிகமாக வதந்திகள் மிக வேகமாகப் பரவுகின்றன. நமக்கு வந்துள்ள செய்தியின் உண்மைத் தன்மை தெரியாமல், அதைப் பலருக்கும் ஃபார்வர்டு செய்யும் பழக்கம் பலருக்கு உள்ளது. இப்படி ஒரு சம்பவத்தால் திணறியுள்ளனர், கேரள அதிகாரிகள்.

Continue reading →

களத்தில் இறங்கிய அ.தி.மு.க ஐ.டி விங் – துரைமுருகனுக்கு சிக்கலை ஏற்படுத்துமா வாட்ஸ்அப் பதிவு?

வேலூர் தொகுதிப் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சி வாட்ஸ்அப் மூலம் புதிய பிரசாரத்தை முன்வைத்துவருகிறது. `துரைமுருகனின் துரோகம் மறக்க முடியுமா?’ என்ற தலைப்பில் வாட்ஸ்அப் மூலம் ஒரு பட்டியலைப் பகிர்ந்துவருகிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.

Continue reading →

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் கேது பகவான்!!

நவக்கிரகங்களில் பாபக் கிரகங்கள், சுப கிரகங்கள் என இரண்டு பிரிவாக கிரகங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. பாவக் கிரகங்கள் என்று கூறினாலும் அந்த கிரகங்கள் அனைத்துமே எப்போதும் தீமையான பலன்களை தருவதில்லை எனினும் இந்த பாபகிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தால் மிகவும் சிரமங்களை வாழ்வில் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். அந்த கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் நிழல் கிரகங்களான ராகு  கேது கிரகங்களில் கேது கிரகம் தாய்வழி பாட்டனார் பற்றி கூறும் கிரகமாக இருக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு முக்தியை அளிக்கவல்ல கிரகமாகவும் இது இருக்கிறது. அத்தகைய கேது கிரகத்தால் ஜாதகருக்கு ஏற்படும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையை போக்குவதற்கான ஒரு எளிய பரிகார முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Continue reading →