Advertisements

ஒற்றைத் தலைமை: காய் நகர்த்தும் எடப்பாடி, பன்னீர் ‘மூவ்’, பி.ஜே.பி ஆபரேஷன்!

கட்சியில் பதவிகள் மாற்றம் தொடர்பாக எடப்பாடி தரப்பிலிருந்து அனுப்பிய பல கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கிறது பன்னீர் தரப்பு. இது, எடப்பாடியைக் கடுப்பாக்கியிருக்கிறது

மோடிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், அ.தி.மு.க-வுக்கு வேலைபார்க்க கமிட் ஆகியிருக்கிறார். இப்போது அவர் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். அது பன்னீருக்குத்தான் அம்பாக வந்து நிற்கும் என்று தெரிகிறது.

 

கடந்த ஜூலை 26 அன்றுதானே கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார். அன்று இரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘ஆட்சியைத் தக்கவைக்க, முதலில் உங்கள் கட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். ஒற்றைத் தலைமை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்குத்தானே காத்திருந்தார் எடப்பாடி. இப்போது கிஷோரே சொல்லிவிட்டதால், காய் நகர்த்த தொடங்கிவிட்டார். அதற்கான வேலைகளை ‘மணி அண்ட் கோ’வினர் செய்துவருகிறார்கள்.

பன்னீரின் மூவ் என்ன?

கட்சியில் பதவிகள் மாற்றம் தொடர்பாக எடப்பாடி தரப்பிலிருந்து அனுப்பிய பல கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கிறது பன்னீர் தரப்பு. இது, எடப்பாடியைக் கடுப்பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில் கட்சியின் ஒற்றைத் தலைமை யார் என்பதை முடிவுசெய்யும் வாக்கெடுப்பை நடத்த எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருக்கிறது. இதை அறிந்து பன்னீர் தரப்பும் தனக்கு ஆதரவான ஆள்களைத் திரட்டிவருகிறது.

சசிகலா தரப்பு என்ன நினைக்கிறது?

சசிகலாவுடன் எடப்பாடி தரப்பு தொடர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அவர் சிறையிலிருந்து விரைவில் வெளியே வருவதற்கான காய் நகர்த்தல்கள் தமிழக அரசு தரப்பிலிருந்தே தொடங்கப்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. பன்னீரை ஓரம்கட்டவே சசிகலாவை எடப்பாடி தரப்பு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.

என்னதான் எடப்பாடி தரப்பு பி.ஜே.பி-யிடம் இணக்கமாக இருந்தாலும் பன்னீர் தரப்புமீது பி.ஜே.பி தலைமைக்குத் தனிப்பாசம் இருக்கத்தான் செய்கிறது. அ.தி.மு.க-வில் அவரின் கை இறங்கினால், பி.ஜே.பி தலைவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்களாம். ஒருவேளை அ.தி.மு.க-வில் அவர் நிலைமை மோசமானால் ராஜ்ய சபா எம்.பி-க்கள் சிலருடன் சேர்த்து, அவரை தங்கள் பக்கம் இழுக்கவும் பி.ஜே.பி கட்சித் தலைமை நினைக்கிறதாம். அப்படி ஒரு நிலைமை வந்தால் அவருடைய மகனுக்கு மந்திரிப் பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பன்னீர் இதற்கு இணங்குவாரா என்றுதான் தெரியவில்லை.

அமித் ஷாவுக்கு ஐ.பி ரிப்போர்ட் போயிருக்கிறது. அதை சரிசெய்யத்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர்மீது கை வைக்க பி.ஜே.பி திட்டமிட்டிருக்கிறது.

தற்போது, அ.தி.மு.க-வின் இமேஜை அடித்து நொறுக்கும் வகையில் பி.ஜே.பி சில திட்டங்களை வைத்திருக்கிறது. அ.தி.மு.க ஊழல்களையும், அமைச்சர்களின் சொத்துக்குவிப்புகளையும் பி.ஜே.பி அரசு கண்டு கொள்ளவில்லை என்ற பரப்புரையை எதிர்க்கட்சியினர் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர். இது மக்களிடமும் எடுபடுகிறது. இதைப்பற்றி அமித் ஷாவுக்கு ஐ.பி ரிப்போர்ட் போயிருக்கிறது. அதை சரிசெய்யத்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர்மீது கை வைக்க பி.ஜே.பி திட்டமிட்டிருக்கிறது. அதில் முதல் குறி விஜயபாஸ்கர் என்கின்றன டெல்லியிலிருந்து வரும் தகவல்கள்.

Advertisements
%d bloggers like this: