புற்றுநோய் முதல் ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்க டைகர் நடஸ்

ஆரோக்கிய உணவுகள் நட்ஸ் வகைகளுக்கு என்றே தனி மவுசு உள்ளது. பாதாம், முந்திரி, வால்நட் என்பவற்றை தவிர்த்து எண்ணற்ற நட்ஸ் வகைகள் உள்ளது. அதில் முக்கியமான நட்ஸ் வகையை

சேர்ந்தது டைகர் நட்ஸ் என்பதாகும். இது ஆரம்ப காலகட்டத்தில் இது எகிப்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை சுஃபா என்றும் அழைப்பார்கள். தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டதால் அனைத்து மார்க்கெட்களிலும் எளிதாக கிடைக்கிறது.

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சி என இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. டைகர் நட்ஸ் வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யவும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் இது உதவுகிறது.

டைகர் நட்ஸில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. இது பல கொழுப்பை கரைக்கும் சேர்மங்களை உருவாக்குவதுடன் கார்டியோவாஸ்குலர் நோயையும் கட்டுப்படுத்துகிறது. டைகர் நட்ஸில் வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால் மூலக்கூறுகள் போன்ற வலிமையான ஆன்டி ஆக்சிடண்ட்கள் இதில் அதிகமுள்ளதால் இது விரைவில் வயதாவது, சுருக்கம், மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. டைகர் நட்ஸ் விறைப்புத்தன்மை பிரச்சினையை குணப்படுத்தவும் இதன் கொட்டைகளை மற்ற இனப்பெருக்க பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தியது.

டைகர் நட்ஸில் இருந்து தயாரிக்கப்படும் பால் ஈரல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும். டைகர் நட்ஸில் மிதமான அளவில் இருக்கும் கலோரியும், அதிகளவில் இருக்கும் நார்சத்துக்களும் இதனை எடைகுறைக்க உதவுகின்றது

%d bloggers like this: