அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடி நீக்கம்! விஸ்வரூபம் எடுத்த எடப்பாடி! பரபரப்பு காரணம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் திடீரென பதவி நீக்கம்

செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டன் பதவி பறிக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மணிகண்டன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை இலாகவை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து தமிழக அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

%d bloggers like this: