இதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது? – ஆய்வு சொல்லும் தீர்வு

உங்கள் உணவுத் தட்டில் எவ்வளவு காய்கறிகள் பழங்கள் இருக்கின்றதோ அந்தளவு உங்களின் இதயம் நலமாக இருக்கும்’ என்பதை ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்.

கடந்த 1987 முதல் 2016 வரை, அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 இளைஞர்களிடையே நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவு:

புலால் உணவுகளைச் சாப்பிடுபவர்களை விடவும், தாவரத்திலிருந்து கிடைக்கும் உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறுகள் 16 சதவிகிதம் குறைகிறது.

இந்த உணவுகள் அனைத்திலும் சர்க்கரைச்சத்து குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்தும் இருப்பதால்தான், இதய ஆரோக்கியம் இந்தளவுக்கு உறுதியாகிறது

ஆய்வாளர் ரெஃபோல்ஸ்

அத்துடன் இதயக்கோளாறு காரணமாக உயிரிழக்கும் அபாயம், 32 சதவிகிதம் குறையும். இதயக்கோளாறு இல்லாமல் வேறு ஏதேனும் உடல்சார்ந்த பிரச்னைகள் அல்லது சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, அது தீவிரமாகி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் 25 சதவிகிதம் தடுக்கப்படுகிறது.

மேற்கூறிய பலன்கள் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்றால், புலால் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லையாம். மாறாக, உட்கொள்ளும் புலால் உணவின் அளவைவிட அதிகளவு தாவர வகை உணவுகளை எடுத்துக்கொண்டால் போதும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதய நலன்

இதய நலன்freepik

ஆய்வு முடிவு குறித்து ஆய்வாளர் ரெஃபோல்ஸ் கூறும்போது, `இதயப் பிரச்னைகளைத் தவிர்க்க நட்ஸ், முழுதானிய உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மிகவும் குறைவாக புலால் உணவுகள் என்ற உணவுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்த பதப்படுத்த உணவுகளையும், இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. இந்த உணவுகள் அனைத்திலும் சர்க்கரைச்சத்து குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்தும் இருப்பதால்தான், இதய ஆரோக்கியம் இந்தளவுக்கு உறுதியாகிறது’ என்று கூறியுள்ளார்.

%d bloggers like this: