Advertisements

எந்த வகைக்கு என்ன பராமரிப்பு? – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

கூந்தல் அழகு

கூந்தல் அழகு

சாதாரண கூந்தல்

  • வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.

  • வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

எந்த வகைக்கு என்ன பராமரிப்பு? - ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

  • பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள்.

  • நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

எண்ணெய்ப் பசையான கூந்தல்

  • வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள்.

  • மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள்.

  • கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூ வுடன் சேர்ந்த கண்டிஷனர் தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.

  • கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.

வறண்ட கூந்தல்

  • லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.

  • சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.

  • துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Advertisements
%d bloggers like this: