Advertisements

அதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி!

வணிகம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக தள்ளுபடி கொடுப்பதை இனியும் தொடர முடியுமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்புக்கான இ-காமர்ஸ் வரைவுக் கொள்கையை, மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. கடந்த பிப்ரவரியில் இ-

காமர்ஸ் துறையில் அந்நிய முதலீட்டுக்கான கொள்கை வெளியிடப்பட்டது. தற்போது நுகர்வோர் பாதுகாப்புக்கான கொள்கையை வெளியிட்டிருக்கிறது.இந்தக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பினரும், வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஆனால் இதுவரை, எந்த இ-காமர்ஸ் நிறுவனமும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. வரைவுக் கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று பொதுவான கருத்தை மட்டுமே கூறியிருக் கின்றன. இ-காமர்ஸ் துறையில் நடக்கும் மோசடிகள், முறையற்ற வர்த்தகங்களைச் சீர்செய்யவும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த வரைவுக்கொள்கையை வெளியிட்டி ருக்கிறோம் என அமைச்சகம் கூறியிருக்கிறது.

விதிமுறைகள் என்ன?

இந்திய விதிமுறைகளுக்குட்பட்டு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் தொழில்செய்ய முடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மற்றும் பொருள்களை விற்கும் நிறுவனத்தின் பெயர், முகவரி, இணையதள முகவரி, மெயில் ஐடி, தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் இ-காமர்ஸ் தளத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள்களைத் தள்ளுபடியில் வழங்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற விதி, இ-காமர்ஸ் நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையிலும் இடம்பெற்றிருந்தது.

தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாங்கும் பொருள்களை யார்மூலம் வாடிக்கையாளர் களுக்கு அனுப்புகிறது என்னும் தகவலை பெரும் பாலும் அறிவிப்பதில்லை. அரசின் இந்த விதிமூலம், எந்த நிறுவனத்திடமிருந்து பொருள்களை வாங்குகிறோம் என்னும் தகவல் வாடிக்கையாளர்களுக்குத் தெரியவரும்போது, இதனால் பிரச்னை ஏற்படும். அதை எளிதாகத் தீர்க்கமுடியும் எனச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல இ-காமர்ஸ் நிறுவனங்களின், நிறுவனர்கள் அல்லது முக்கியமான உயரதிகாரிகள் ஆகியோர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளைக் குறித்து இணையதளத்தில் பதிவிடும் கருத்துகளை மிகைப்படுத்தி வெளியிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கட்டணம் குறித்தும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். பொருள்களின் விலை, ஜி.எஸ்.டி கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய சூழல் இருந்தால், 14 நாள்களுக்குள் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், வாரன்டி, பொருளைத் திருப்பிக் கொடுப்பது உள்ளிட்ட தகவல்களும் இருக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு இணையதளத்திலும் குறைதீர் அதிகாரியின் பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப் படும் குறைகள், அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் எஃப்.டி.ஐ குறித்த ஒழுங்குமுறை வந்தது. தற்போது நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதிய ஒழுங்கு முறையை வெளியிட்டிருக்கிறது. இதைப்போல, பல அமைச்சகங்கள் இப்படி நெறிபடுத்தினால் எப்படித் தொழிலில் கவனம்செலுத்துவது என மறைமுகமாகச் சிலர் கருத்து தெரிவித்திருக் கின்றனர்.

பொருள்களை வாங்கிவிற்கும் இ-காமர்ஸ் நிறுவனம், விற்பனையாளர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம் என அனைத்தையுமே இ-காமர்ஸ் என்னும் பிரிவுக்குள் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவந்திருக்கிறது. அதேபோல, உணவு வினியோகம் செய்யும் ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபிரிவுக்குள் வர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த பத்தாண்டுகளில் இ-காமர்ஸ் துறை மூலமாக நடக்கும் வர்த்தகம், 10 சதவிகிதத்துக்குமேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு அமைச்சகமும் புதுப்புது விதிமுறை களை உருவாக்குவது சரியா என்னும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன!

Advertisements
%d bloggers like this: