மீண்டும் முதல்வராகும் ஓபிஎஸ் !! கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து , அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணமாகி அங்கு வாழும் தமிழர்கள் மூலமாக முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார் .
அவரோடு அமைச்சர்கள் சிலரும் , அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள் .

மாநில முதல்வர் ஒருவரின் வெளிநாடு பயணத்தின் போது தற்காலிக முதல்வராக ஒருவர் செயல்பட வேண்டியது அவசியம் .

ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்தவரும் , அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த இடத்தில இருப்பவரும் அவை முன்னவருமான ஓ . பன்னீர் செல்வம் தான் இருக்க வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

கடந்த 11 ம் தேதி சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இது குறித்து ஓபிஎஸ் பேசியதாக தெரிகிறது . அமித்ஷாவும் முதல்வர் எடப்பாடியிடம் ஓபிஎஸ் தற்காலிக முதல்வராகுவது தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் . அமித்ஷா பேச்சை தட்ட முடியாத முதல்வர் சம்மதம் தெரிவித்து விட்டாராம் . ஆனாலும் ஓபிஎஸ் முதல்வராவதில் எடப்பாடிக்கு துளியும் விருப்பம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆனால் அதிமுக தலைமையக வட்டாரங்கள் வேறு விதமாக செய்திகள் கூறுகின்றன . முதல்வருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களான வேலுமணி அல்லது தங்கமணி , இருவரில் ஒருவருக்கு முதல்வர் பதவி செல்ல வாய்ப்பு இருக்கிறதாம் . எனினும் அமித்ஷாவின் சாய்ஸ் ஓபிஎஸ் என்பதால் அவரே தற்காலிக முதல்வர் ஆவர் என்று தெரிகிறது

%d bloggers like this: