வாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை!

தண்ணீர் சிக்கனம்

  • காலை எழுந்ததும் பிரஷ் செய்யும்போது, தேவைக்கேற்ப குழாயைத் திறந்து மூடி பயன்படுத்தலாம்.

  • அரிசி, காய்கறிகளை அலம்பும் தண்ணீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றலாம்.

  • பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு பாத்திரங்களைத் தேய்க்கலாம்.

  • துணிகளைக் கடைசியாக அலசிய தண்ணீரை பாத்ரூம் கழுவப் பயன்படுத்தலாம்.

  • வாஷிங் மெஷினிலிருந்து வெளிவரும் தண்ணீரில் மிதியடிகள், கைப்பிடித் துணிகளை சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்.

  • அக்வா ப்யூரிஃபையர் பயன்படுத்தும் போது வெளிவரும் கழிவுநீரை பக்கெட்டில் பிடித்து வைத்து, பாத்திரங்களைத் தேய்க்க வும், கழிவறை மற்றும் குளியலறையை சுத்தப் படுத்தவும் உபயோகிக்கலாம்.

  • டாய்லெட்டில் சிறுநீர் மற்றும் கழிவைச் சுத்தப்படுத்த, தேவைப்படும் தண்ணீருக்கேற்ப இரண்டு விதமான பொத்தான்களை ஃப்ளஷில் வைக்கலாம்.

தண்ணீர் சிக்கனம்

தண்ணீர் சிக்கனம்
  • பொதுவெளி கட்டணக் கழிப்பறைகளில் தண்ணீர் வீணாகிக்கொண்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிப்பதும் நம் கடமைதான்.

  • நுரை நிறைய வர வேண்டும் என்பதற்காக அதிக ரசாயனங்களைக் கலந்து விற்கும் பொருள்களாலும் தண்ணீர் நிறைய வீணாகும். அதனால், அதிக நுரை இல்லாத தரமான பொருள்களை சந்தைப்படுத்த தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்.

  • எத்தனை அடிகள் வேண்டுமானாலும் தோண்டித்தோண்டி பூமித்தாயை கஷ்டப் படுத்திக்கொண்டிருக்கும் நிலை மாறி, இருக்கும் நீர்நிலைகளைத் தூர் வாரி நல்ல முறையில் பராமரித்து, வரப்போகும் மழை நீரை சேமித்து பூமித்தாயை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள அரசு திட்டமிட வேண்டும்.

இல்லையேல் வருங்காலத்தில் `பெட்ரோல் பங்க்’கைப்போல `வாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை!

%d bloggers like this: