Advertisements

ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

கெட்டுப்போய்விடக் கூடாதென உணவுப்பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்த காலம் மாறி, ஃப்ரிட்ஜில் வைத்ததாலேயே கெட்டுப்போகும் உணவுகளைப் பலரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் வைப்பதால் சில உணவுகளின் தன்மை மாறிப்போகும். ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாத சில உணவுகளின் பட்டியல்…..

தக்காளி: இதை ஃப்ரிட்ஜில்வைத்துப் பயன்படுத்தினால், இதன் சுவையில் மாற்றம் ஏற்படும். அதன் தன்மையும் மாவு போன்று மாறிவிடும்.

ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

அவகேடோ: காயாக இருக்கும் அவகேடோவை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. பழுத்த அல்லது ஏற்கெனவே வெட்டிய பழத்தை ஃப்ரிட்ஜில்வைத்துப் பயன்படுத்தலாம்.

வெங்காயம்: ஃப்ரிட்ஜிலிருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தை மென்மையாக்கி, பூஞ்சைத்தொற்றை ஏற்படுத்திவிடும். அத்துடன் ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற உணவுப் பொருள்களிலும் இதன் வாசனை பரவிவிடும்.

பூண்டு: இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் ரப்பர்போல மாறிவிடும்.

பிரெட்: ஃப்ரிட்ஜில்வைத்திருந்தால், இது சீக்கிரமே உலர்ந்துவிடும்.

உருளைக்கிழங்கு: ஃப்ரிட்ஜில்வைத்தால், உருளைக்கிழங்கிலிருக்கும் ஸ்டார்ச், விரைவில் சர்க்கரைச்சத்தாக மாறி, சுவையைக் கெடுத்துவிடும்.

காபிக்கொட்டை, காபித்தூள் இரண்டையும் ஃப்ரிட்ஜில்வைத்தால் அவற்றின் சுவை மாறக்கூடும். மேலும், ஃப்ரிட்ஜிலிருக்கும் மற்ற பொருள்களின் வாசனையை அவை உட்கிரகித்துக்கொள்ளும்.

தேன்: ப்ரிட்ஜில்வைத்தால், படிகங்களாக உறைந்துவிடும். எனவே, தேன் பாட்டிலை இறுக்கமாக மூடி அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சிறந்தது.

Advertisements
%d bloggers like this: