மனதைப் படிக்கும் கருவி

நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லத் தேவையில்லை, எழுத வேண்டியதை, பரிமாற வேண்டிய கருத்துகளை மனதில் நினைத்தாலே போதும்.  உங்களின் மனது நினைப்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதை தட்டச்சு செய்யும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பது தான் ஃபேஸ்புக்கின் அடுத்த திட்டம். இந்தக் கருவி மட்டும் வந்துவிட்டால் நீங்கள் மணிக்கணக்காக ஸ்டேட்டஸ்

போடவேண்டியதில்லை. ஃபேஸ்புக்கை லாக்-இன் செய்துவிட்டு இந்த  உலகுக்கு நீங்கள் சொல்ல வேண்டியதை நினைத்தாலே போதும்.
அடுத்த நொடியில் அது பதிவாக உங்கள் முன் காட்சியளிக்கும். அதை ஒருமுறை  படித்துவிட்டு போஸ்ட் செய்ய வேண்டியதுதான் உங்கள் வேலையாக இருக்கும். அத்துடன், பேச முடியாதவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.  இந்தக் கருவியைக் கண்டுபிடிப்பதற்காகவே ஃபேஸ்புக் சில கோடிகளை ஒதுக்கியுள்ளது. இப்போது சிலரிடம் பரிசோதனை முயற்சிகள்  நடந்துவருகின்றன. அடுத்த வருடத்துக்குள் மனதைப் படித்து தட்டச்சு செய்யும் கருவி சந்தைக்கு வந்து பலரை உறங்கவிடாமல் செய்யலாம்.

%d bloggers like this: