கணையம் சுரக்கும் மகிழ்ச்சி!

இன்சுலின், குளுக்கோகான் என்ற இரண்டு ஹார்மோன்களை, கணையம் சுரக்கிறது.
இதில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள, அதிகப்படியான கொழுப்பை, சர்க்கரையாக மாற்றவும், ரத்தத்தில்

சேரும் அதிக சர்க்கரையை சமன் செய்யத் தேவையான இன்சுலின் சுரக்கவும், துாண்ட வல்லது குளுக்கோகான்.
வாரத்தில், ஐந்து நாட்கள், தலா 30 நிமிடங்கள், தீவிர உடற்பயிற்சி செய்யும் போது, இந்த இரண்டு ஹார்மோன்களும் தேவையான அளவு சுரந்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பும் கரைகின்றன.
தீவிர உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சுரக்கும் குளுக்கோகானுக்கு இன்னொரு பெயர் மகிழ்ச்சி ஹார்மோன். இது, சுரக்கும் போது, மனதில் மகிழ்ச்சியையும், நேர்மறை உணர்வையும் தரும். அதிக கலோரிகள் குறையும்.

%d bloggers like this: